HomeBlogவீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பது பற்றிய ஒருநாள் பயிற்சி
- Advertisment -

வீட்டு உபயோக பொருட்கள் தயாரிப்பது பற்றிய ஒருநாள் பயிற்சி

 

One day training on home appliance making

வீட்டு உபயோக
பொருட்கள் தயாரிப்பது பற்றிய
ஒருநாள் பயிற்சி

தமிழ்நாடு
மகளிர் தொழில் முனைவோர் நலச்சங்கத்தின் நிறுவனர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:

பெண்கள்
தொழில் முனைவிற்காக ஏராளமான
தொழில் பயிற்சிகள் ஆன்லைன்
மூலமாகவும், நேரடியாகவும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த பயிற்சி
வருகிற 16-ந் தேதி
(
செவ்வாய்க்கிழமை) காலை
9.30
மணி முதல் மாலை
4.30
மணி வரை நடைபெற
இருக்கிறது.

இந்த
பயிற்சியில் சாதாரண மெழுகுவர்த்தி, டிசைன் மெழுகுவர்த்தி, வாசனை
மெழுகுவர்த்தி, பெருங்காயம், வாசனை ஊதுபத்தி, கம்ப்யூட்டர் சாம்பிராணி போன்ற வீட்டு
உபயோக பொருட்கள் தயாரிப்பது எப்படி? என்பது பற்றி
கற்றுத்தரப்பட்டு, அதற்கு
தேவையான மூலப்பொருட்கள் வாங்கும்
இடங்களும், அவற்றை கையாளும்
விதங்களும், மார்க்கெட்டிங் செய்யும்
முறைகளும் நேரடி பயிற்சியாக வழங்க உள்ளோம். இந்த
பயிற்சியில் கிடைக்கக்கூடிய அரிய
வாய்ப்பை பயன்படுத்தி தொழில்
மேம்பாடுகளை சொந்தமாக நாமே
வீட்டில் இருந்து தயாரித்து
விற்பனை செய்து கொள்ள
முடியும்.

இந்த
பயிற்சி அனைத்தும் தேர்ந்தெடுத்த வல்லுனர்களை கொண்டு பாட
விளக்கமாகவும், செய்முறை
பயிற்சியும் வழங்கப்படுகிறது. வெளிமாவட்டங்களை சேர்ந்த பெண்கள் இந்த
பயிற்சியை கற்றுக்கொள்ள விரும்பினால் பெண்களுக்கு மட்டும் சங்கம்
மூலமாக ஒருநாள் தங்குவதற்கு ஏற்பாடு செய்து தரப்படும்.
முன்பதிவு செய்பவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

விண்ணப்பிக்க:
Click
Here

தங்களுடைய
பெயர், ஊர், செல்போன்
எண் போன்ற விவரங்களை
குறுந்தகவல் மூலமாகவும் அனுப்பலாம். எங்களுடைய இணையதளம் மூலமாகவும் விண்ணப்பிக்கலாம். தேர்வு
செய்யப்படுபவர்களுக்கு பயிற்சி
அளிக்கும் இடம் பின்னர்
அறிவிக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -