கோவை: தமிழ்நாடு வேளாண் பல்கலையில் உள்ள, வேளாண் வணிக மேம்பாட்டு இயக்ககத்தில், ஒரு நாள் வேளாண் ஏற்றுமதி வாய்ப்புகள் குறித்து, பயிற்சி வழங்கப்படவுள்ளது.
இப்பயிற்சி வரும், 29ம் தேதி பல்கலையில் நடைபெறவுள்ளது. பயிற்சி கட்டணமாக நபர் ஒருவருக்கு, 1,770 ரூபாய் செலுத்த வேண்டும்.
இதில், விவசாயிகள், விவசாய உற்பத்தியாளர் நிறுவனங்கள், மகளிர், இறுதியாண்டு பட்டதாரி மாணவர்கள், இளைஞர்கள், பட்டதாரிகள் பங்கேற்கலாம். மேலும் முன்பதிவுக்கு, 0422-6611310/ 99949-89417 /95004- 76626 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.