TAMIL MIXER
EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில் ஒரு நாள் இலவச பயிற்சி
நமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 21ம் தேதி, இயற்கை விவசாயம் மற்றும் அங்கக வேளாண்மை என்ற தலைப்பில், ஒரு நாள் இலவச பயிற்சி முகாம் நடைபெறுகிறது.
இது குறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர், வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் மோகனூர் ரோட்டில், கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலைய வளாகத்தில் வேளாண் அறிவியல் நிலையம் (கேவிகே) அமைந்துள்ளது.
இங்கு
மத்திய,
மாநில
அரசுகளின்
உதவியடன்
அவ்வப்போது,
விவசாயிகளுக்கும்,
இளைஞர்களுக்கு
வேளாண்மை,
கால்நடை
மற்றும்
கோழி
வளர்ப்பு,
மீன்
வளர்ப்பு.
தீவன உற்பத்தி உள்ளிட்டவை சம்மந்தமான பல்வேறு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு
வருகிறது.
மத்திய
வேளாண்
வளர்ச்சிக்கழகம்
(ஐசிஏஆர்
) சார்பாகவும்
இங்கு
பயிற்சிகள்
வழங்கப்படுகிறது.
தற்போது
நாடு
முழுவதும்,
விவசாயிகள்
இயற்கை
விவசாயத்திற்கு
மாறி
வருகின்றனர்.
ரசாயன உரங்களை தவிர்த்து இயற்கை உரங்களை பயன்படுத்தி அங்கக வேளாண்மை முறையில் பல்வேறு பயிர்களை விளைவிக்கின்றனர்.
பல
நகரங்களிலும்
இயற்கை
வேளாண்மை
அங்காடிகள்
துவக்கப்பட்டு
வருகின்றன.
பொதுமக்களிடையே
இயற்கை
வேளாண்மை
மூலம்
விளைவித்த
பொருட்களுக்கு
நல்ல
வரவேற்பு
கிடைத்து
வருகிறது.
இதையொட்டி, நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில், வரும் 21ம் தேதி வெள்ளிக்கிழமை,
காலை
10 மணிக்கு,
இயற்கை
விவசாயம்
மற்றும்
அங்கக
வேளாண்
என்ற
தலைப்பில்,
ஒருநாள்
இலவச
பயிற்சி
முகாம்
நடக்கிறது.
இப்பயிற்சியில்,
இயற்கை
விவசாயத்தின்
முக்கியத்துவம்,
இயற்கை
வேளாண்
வழி
முறைகள்,
பயிர்
சுழற்சி
முறைகள்,
பாரம்பரிய
பயிர்களை
தேர்வு
செய்தல்,
கலப்பு
மற்றும்
ஊடுபயிர்
சாகுபடி,
விதை
நேர்த்தி
முறைகள்,
இயற்கை
முறையில்
மண்வள
மேம்பாட்டு
முறைகள்.
மண்ணில்
நுண்ணுயிர்களின்
எண்ணிக்கையை
அதிகப்படுத்துதல்,
பண்ணையில்
கிடைக்கக்கூடிய
கழிவுகளை
கொண்டு,
இயற்கை
உரம்
தயாரிக்கும்
முறைகள்,
மண்புழு
உர
உற்பத்தி
முறைகள்,
அங்கக
வேளாண்
முறையில்,
பூச்சி
மற்றும்
நோய்கள்
கட்டுப்பாடு
குறித்து
விளக்கப்படுகிறது.
இயற்கை
வேளாண்மை
முறைகள்
குறித்த
செயல்
விளக்கமும்
அளிக்கப்படும்.
இந்த பயிற்சி வகுப்பில், விவசாயிகள், பண்ணையாளர்கள்,
ஊரக
மகளிர்,
இளைஞர்கள்
மற்றும்
ஆர்வம்
உள்ள
அனைவரும்
கலந்து
கொள்ளலாம்.
விருப்பம்
உள்ளவர்கள்,
வேளாண்
அறிவியல்
நிலையத்தை,
நேரிலோ
அல்லது
04286 266345,
266650 என்ற
தொலைபேசி
எண்ணிலோ
தொடர்பு
கொண்டு,
தங்களது
பெயரை
முன்பதிவு
செய்து
பயன்பெறலாம்.
பதிவு செய்பவர்கள் தங்களின் ஆதார் எண்ணை கட்டாயம் பதிவு செய்ய வேண்டும்.