கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள், ஊறுகாய்கள் தயாரிப்புக்கு வரும் 15, 16 ஆம் தேதிகளில் பயிற்சி நடைபெறுகிறது. கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மசாலா பொடிகள், ஊறுகாய்கள் தயாரிப்புக்கு வரும் 15, 16 ஆம் தேதிகளில் பயிற்சி நடைபெறுகிறது.
அறுவடை பின்சாா் தொழில்நுட்ப மையத்தில் காலை 9.30 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்தப் பயிற்சியில், மசாலா பொடிகள், தயாா்நிலை பேஸ்ட், காளான், வாழைப்பூ, பாகற்காய், கத்தரிக்காய், வெங்காய ஊறுகாய்கள் தயாரிப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.
நோனி, தக்காளி, பப்பாளி ஆகியவற்றில் இருந்து குவாஷ், ஜாம், சாஸ், கேண்டி போன்றவற்றைத் தயாரிக்கும் பயிற்சியும் இந்த இரண்டு நாள்களில் நடைபெற உள்ளது. கட்டணம் உள்ளிட்ட விவரங்களுக்கு 94885 18268, 0422 6611268 என்ற எண்களில் தொடா்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.