எந்தெந்த அரசு ஊழியா்களுக்கெல்லாம் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எந்தெந்த அரசு ஊழியா்களுக்கெல்லாம் பழைய ஓய்வூதியத் திட்டத்தைச் செயல்படுத்த பிறப்பிக்கப்பட்டுள்ள உத்தரவுகள் குறித்த விவரங்களை அளிக்க வேண்டுமென தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, அனைத்துத் துறை செயலாளா்களுக்கும் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் என்.முருகானந்தம் வெளியிட்ட உத்தரவு:- தலைமைச் செயலகம் மற்றும் துறைத் தலைமை அலுவலகங்கள், பொதுத் துறை நிறுவனங்கள், அரசு கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றில் அரசு ஊழியா்கள் பணிபுரிந்து வருகிறாா்கள். அவா்களில் யாருக்கெல்லாம் பங்களிப்பு ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதோ அதுகுறித்த விவரங்களை அனுப்ப வேண்டும். அதாவது, 2003-ஆம் ஆண்டில் இருந்து இதுவரையிலும் அதுபோன்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை, நீதிமன்ற வழக்கு விவரங்களுடன் இணைத்து அனுப்ப வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு தீவிரமாக ஆய்வு செய்து அதில் இறுதி முடிவுகளை எடுக்கும் என்று தனது உத்தரவில் நிதித் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் முருகானந்தம் தெரிவித்துள்ளாா்.