Sunday, December 22, 2024
HomeNotesAll Exam Notesவரலாற்றுக்கு முற்பட்ட காலம்
- Advertisment -

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்

work 20 Tamil Mixer Education
FINAL WHATASPP 87 Tamil Mixer Education

வரலாற்றுக்கு
முற்பட்ட காலம்

வரலாற்றுக்
காலம்: 

அக்காலத்தில் வாழ்ந்த மனிதர்களைப் பற்றி எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் மற்றும்
பிற ஆதாரங்கள் உடைய காலத்தையே வரலாற்றுக் காலம் என்கிறோம். 

வரலாற்றுக்கு முற்பட்ட காலம்: 

வரலாற்றுக்கு முற்பட்ட காலம் என்பது எழுத்துப் பூர்வமான ஆதாரங்கள் இல்லாத காலத்தில்
வாழ்ந்தவர்களைப் பற்றி படிமங்கள், புதைபொருள்கள், எலும்புகள் ஆகியவற்றின் மூலம் தெரிந்துகொள்ள
முடியும். அக்காலத்தையே வரலாற்றுக்கு முந்தைய காலம் என்கிறோம். 

வரலாற்றுக்கு முற்பட்ட
காலத்தை நான்கு பிரிவுகளாக பிரிக்கின்றனர். 

•   பழைய
கற்காலம் (கி.மு.1000 ஆண்டுகள்) 
•   புதிய கற்காலம்
(கி.மு.10000 – கி.மு.4000) 
•  செம்பு கற்காலம்
(கி.மு.3000 – கி.மு.1500) 
•    இரும்பு காலம்
(கி.மு.1500 – கி.மு.600) 

கற்காலம் என்பது கருவிகளைச் செய்வதற்காகக் கற்கள் பயன்படுத்தப்பட்ட
வரலாற்றுக்கு முந்திய காலப் பகுதியைக் குறிக்கிறது. கற்கருவிகள் பலவகையான கற்களைக்
கொண்டு செய்யப்பட்டன. எடுத்துக்காட்டாக தீக்கற்கள் செதுக்கப்பட்டு வெட்டும் கருவிகளாகவும்,ஆயுதங்களாகவும்
பயன்படுத்தப்பட்டன. 

பழைய கற்காலம்: 

• பழைய
கற்காலம் என்பது ஆரம்ப காலக் கற்காலமாகும். பழைய கற்காலம் என்பது இலை,மரப்பட்டை,விலங்குகளின்
தோல்களைப் பயன்படுத்திய காலம். 

•  பழைய
கற்காலத்தில் விலங்குகளை வேட்டையாடியும், உண்ணக் கூடிய தாவரங்கள் மற்றும் கிழங்குகளை
சேகரித்தும் மக்கள் தங்களது உணவைத் தேடிக் கொண்டனர். எனவே இவர்களை ‘உணவை சேகரிப்போர்’
என்று அழைக்கின்றனர். 

• பழைய கற்கால மனிதன்
நெருப்பைக் கண்டுபிடித்தான். 

• ராபர்ட் புரூஸ்
பூட் என்பவர் பழைய கற்கால கருவிகளை சென்னைக்கு அருகில் உள்ள பல்லாவரத்தில் முதன்முதலில்
கண்டறிந்தார். 

• விலங்குகளை வேட்டையாடுவதற்கு
கற்கருவிகளையே இந்த மக்கள் பயன்படுத்தினர். கையளவு கற்கருவி மற்றும் உடைந்த கூழாங்கற்களே
இவர்களது ஆயுதங்களாகும். 

• கற்கருவிகள்
கெட்டியான குவார்ட்சைட் எனப்படும் பாறைக்கற்களால் ஆனவை. 

• பிம்மிட்கா போன்ற ஒரு சில பழைய கற்கால இடங்களில் இவர்களது ஓவியங்களும்
காணப்படுகின்றன. 

• காஞ்சிபுரம், வேலூர்,
திருவள்ளுவர் மாவட்டங்களிலும் பழைய கற்கால கருவிகள் கண்டறியப்பட்டுள்ளன. 

•சென்னையை அடுத்துள்ள கொற்றலையாற்றின் சமவெளியிலும்,
வட மதுரையிலும் பழைய கற்காலத்தைச் சேர்ந்த கைக்கோடாரிகள் மற்றும் சிறிய கற்கருவிகள்
கிடைத்துள்ளன. 

இந்தியாவில் காணப்படும்
பழைய கற்கால மக்கள் வாழ்ந்த இடங்கள்: 

அ.
வடமேற்கு இந்தியாவில் சோன் பள்ளத்தாக்கு மற்றும் பொட்வார் பீடபூமி 
ஆ. வடஇந்தியாவில்
சிவாலிக் குன்றுகள் 
இ. மத்திய பிரதேசத்தில் பிம்பேட்கா. 
ஈ. நர்மதைப் பள்ளத்தாக்கில்
ஆதம்கார் குன்று 
உ. ஆந்திரப் பிரதேசத்தில் கர்நூல் 
ஊ. சென்னைக்கு அருகிலுள்ள அத்திரம்பாக்கம் 

இடைக் கற்காலம்(கி.மு. 10000-கி.மு. 6000): 

• இடைக்
கற்காலம் என்பது  மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில்
கற்காலத்தில் பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட கால கட்டத்தைக்
குறிக்கிறது. 

• புதிய கற்காலத்திலேயே
முறையான காடழிப்பு முயற்சிகள் இடம்பெற்றன எனினும் இடைக் கற்காலத்திலும் உலகின் காட்டுப்
பகுதிகளில் காடுகள் அழிக்கப்பட்டதிற்கான சான்றுகள் கிடைக்கப் பெற்றுள்ளன. 

• பெரும்பாலான பகுதிகளில் நுண்கற்கருவிகள் இக்காலப்
பண்பாட்டுக்குரிய சிறப்பியல்பாகக் காணப்படுகின்றன. தூண்டில்கள், கற் கோடாரிகள், ஓடங்கள்,
வில்லுகள் போன்ற மரப் பொருட்கள் என்பனவும் சில இடங்களில் காணப்பட்டுள்ளன. 

• இடைக்கற்கால சின்னங்கள் குஜராத்தில் லாங்கன்ச்,
மத்திய பிரதேசத்தில் ஆதம்கார், ராஜஸ்தான், உத்திரப் பிரதேசம், பீகார் ஆகிய இடங்களில்
கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

• பாறைக் குகைகளில்
காணப்படும் ஒவியங்களிலிருந்து இடைக்கற்கால மக்களின் சமூக வாழ்க்கை மற்றும் பொருளாதார
நடவடிக்கைகள் பற்றி ஒரளவு அறிய முடிகிறது. 

• இடைக்
கற்காலத்தில் வேறுவகையிலான கற்கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மிகச் சிறிய கற்களாலான
இவை பெரும்பாலும் அதிகபட்சம் ஐந்து சென்டிமீட்டர் அளவையுடையதாகும். எனவே இவற்றை நுண்கற்கருவி
அல்லது மைக்ரோலித் என்று அழைக்கிறோம். 

• வேட்டையாடுதல்,
உணவு சேகரித்தல் ஆகியன இக்காலத்திலும் தொடர்ந்தன. பெரிய விலங்குகளுக்குப்பதில் சிறிய
விலங்குகளை வேட்டையாடுவதிலும், மீன் பிடிப்பதிலும் இக்கால மக்கள் அதிக கவனம் செலுத்தினர்.
வில் அம்பை வேட்டைக்குப் பயன்படுத்தினர். 

• மேலும்
ஒரே இடத்தில் நீண்ட காலம் தங்கி வாழும் போக்கும் வளரத் தொடங்கியது. ஆகையால், பிராணிகளை
வளர்த்தல், தோட்டப் பயிரிடுதல், தொடக்கக்கால வேளாண்மை போன்ற நடவடிக்கைகளை இக்காலத்தில்
தொடங்கின. நாய், மான், பன்றி, தீக்கோழி போன்ற விலங்குகளின் எலும்புகள் கிடைத்துள்ளமை
இதற்கு சான்றாகும். 

புதிய கற்காலம்: 

• புதிய
கற்காலம் என்பது மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியின் காலகட்டத்தைக் குறிக்கும்.இக்காலகட்டமே
கற்காலத்தின் இறுதிப் பகுதியாகும். இது இடைக்கற்காலத்தை அடுத்து வேளாண்மைத் தொழில்நுட்பத்தின்
எழுச்சியுடன் உருவானது.

• வேளாண்மைப் புரட்சியை
உருவாக்கிய இக்காலம் செம்புக் காலம், வெண்கலக் காலம், இரும்புக் காலம் ஆகிய காலப்பகுதிகளில்
நிகழ்ந்த உலோகக் கருவிகளின் பயன்பாட்டின் அறிமுகத்துடன் முடிவடைந்தது. 

• சில வகைக் கோதுமை, தினை, சாமை போன்ற தானியங்களை
உள்ளடக்கியிருந்தன. 

• கால்நடை வளர்ப்பிலும்
செம்மறிகளும், ஆடுகளும் மட்டுமே வளர்க்கப்பட்டன. கி.மு.7000 அளவில் இவற்றுடன் மாடுகளும்,
பன்றிகளும் சேர்க்கப்பட்டன.

• இக்காலத்திலேயே
நிலையான அல்லது பருவ காலங்கள் சார்ந்த குடியிருப்புக்களும், மட்பாண்டங்களின்  பயன்பாடும் தோன்றின. • இந்தியாவின் பல பகுதிகளில் புதிய கற்காலப் பொருட்கள் கிடைத்துள்ளன. காஷ்மீர்
பள்ளத்தாக்கு, பீகாரில் சிராண்ட், உத்திரப் பிரதேசத்தில் பீலான் சமவெளி, தக்காணத்தில்
பல இடங்கள் ஆகியனவும் இதிலடங்கும். 

• தென்னிந்தியாவில்
பல புதிய கற்கால வசிப்பிடங்களில் அகழ்வாய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளன. கர்நாடகத்தில் மாஸ்கி,
பிரம்மகிரி, ஹல்லூர், கோடேகல், தமிழ்நாட்டில் பையம்பள்ளி மற்றும் ஆந்திரப்பிரதேசத்தில்
உட்னூர் ஆகிய இடங்கள் அவற்றில் குறிப்பிடத்தக்கவை. 

• புதிய கற்காலத்தில் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்டது. 

• புதிய கற்காலத்தில் இறந்தோரை அடக்கம் செய்யும்
முறை காணப்பட்டது. 

• வேளாண்மை, விலங்குகளை
வளர்த்தல், கற்கருவிகளை பளபளப்பாக்குதல், மட்பாண்டம் செய்தல் போன்றவை புதிய கற்கால
பண்பாட்டின் சிறப்புக் கூறுகளாகும். 

• தாவரங்களைப்
பயிரிடத் தொடங்கியதாலும் பிராணிகளை வளர்த்தமையாலும் ஓரிடத்தில் தங்கி வாழ முற்பட்ட
புதிய கற்கால மக்கள் கிராம சமுதாயங்கள் உருவாகவும் வழி வகுத்தனர். 

• கருவிகளை உருவாக்குவதிலும் மனிதனுக்குத் தேவையான
சாதனங்களைப் படைப்பதிலும் தொழில்நுட்பத்தில் ஏற்பட்ட மாறுதல்களை இக்காலத்தில் தெளிவாகக்
காணமுடிகிறது. கற்கருவிகள் நன்கு பளபளப்பாக தீட்டப்பட்டன. வேட்டையாடுவதற்கும் மரங்களை
வெட்டுவதற்கும் பளபளப்பான கூரிய கற்கோடரிகள் பெரிதும் பயனுடையதாக இருந்தன. 

• புல்லால் ஆன குடிசைகளுக்குப்பதிலாக களிமண் கற்களாலான
குடிசைகள் அமைக்கப்பட்டன. 

• மட்பாண்டங்கள்
செய்வதற்கு சக்கரம் பயன்படுத்தப்பட்டது.

• சமைப்பதற்கும்,
உணவு தானியங்களை சேமித்து வைக்கவும் மட்பாண்டங்கள் பயன்பட்டன. இறந்தோரை அடக்கம் செய்வதற்கு
பெரிய மண்பாண்ட தாழிகள் பயன்படுத்தப்பட்டன. 

• சாகுபடி
முறைகளிலும் முன்னேற்றம் காணப்பட்டது. பல்வேறு காலகட்டங்களில் பல்வேறு இடங்களில், கோதுமை,
பார்லி, நெல், தினை போன்றவை பயிரிடப்பட்டன. கிழக்கிந்தியாவில் நெல் அதிகம் பயிரிடப்பட்டது. 

• செம்மறியாடுகள், ஆடுகள், மாடுகள் வளர்ப்பு
பரவலாகக் காணப்பட்டது. 

• பயிரிடுவதற்கும்,
போக்குவரத்துக்கும் கால்நடைகள் பயன்பட்டன. 

• பருத்தி
மற்றும் கம்பளி ஆடைகளை புதிய கற்கால மக்கள் அணிந்தனர். 

தமிழகத்தில் கற்கால கருவிகள்
கிடைக்கப்பெற்ற இடங்கள்: 

பழைய கற்கால கருவிகள்: 

• பல்லாவரம்,
காஞ்சிபுரம், வேலூர், திருவள்ளுவர் 

புதிய கற்காலாக் கருவிகள்: 

• திருநெல்வேலி, சேலம், புதுக்கோட்டை, திருச்சிராப்பள்ளி,
தான்றிக்குடி, கொடைக்கானல் மலை. 

செம்பு காலம்: 

• இக்காலத்தில்
செம்பு மற்றும் வெண்கலம் ஆகிய உலோகங்கள் பயன்படுத்தப்பட்டன. 

• மனிதன் அறிந்த முதல் உலோகம் செம்பு. 

• மனித குல வரலாற்றில் உலோகத்தை உருக்கிவார்க்கும்
தொழில்நுட்பத்தை கண்டுபிடித்ததும் உலோகத்திலான பொருட்களை உருவாக்கி பயன்படுத்தியதும்
முக்கிய நிகழ்வுகளாகும். 

• கற்கருவிகளும்
தொடர்ந்து பயன்பாட்டில் இருந்து வந்தன ஒரு சில நுண்கற்கருவிகள் முக்கியத்துவம் பெற்று
விளங்கின. இக்காலத்தில் உலோக தாதுக்களைத் தேடி மக்கள் நெடுந்தூரம் பயணம் செய்யவும்
தொடங்கினர். இதனால் செம்பு கற்கால பண்பாடுகளுக்கிடையே தொடர்புகள் ஏற்பட்டன. 

• இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் செம்பு
கற்காலப் பண்பாடுகள் காணப்படுகின்றன. 

• பொதுவாக
ஆற்றங்கரைகளிலேயே செம்பு – கற்காலப் பண்பாடுகள் வளர்ச்சியடைந்தன. குறிப்பாக ஹாப்பா
பண்பாடு செம்பு கற்காலப் பண்பாட்டின் ஒரு பகுதியேயாகும். 

• உலோக காலத்தின் தொடக்கத்தில் இவர்கள் உலோகத்தைப் பயன்படுத்தவில்லை
என்றாலும் கி.மு. 2000 ஆண்டுவாக்கில் செம்பும் வெண்கலமும் இப்பகுதியில் பயன்படுத்தப்பட்டதற்கான
சான்றுகள் உள்ளன. 

• தமிழ்நாட்டிலுள்ள பையம்பள்ளியில்
வெண்கலம் மற்றும் செம்பு ஆகியவற்றாலான பொருட்கள், சுடுமண் உருவங்கள், மண்பாண்டங்கள்
போன்றவை கண்டெடுக்கப்பட்டுள்ளன. 

• கி.மு.4300க்கும்
3200க்கும் இடைப்பட்ட செப்புக் காலத்தில் சிந்துவெளி நாகரிகப் பகுதிகளில் கிடைத்த செராமிக்
பொருட்கள் தெற்கு துருக்மெனிஸ்தான், வடக்கு ஈரான் ஆகிய பகுதிகளில் கிடைத்த செராமிக்
பொருட்களுடன் ஒத்திருக்கின்றன. 

• இது இக்காலத்தில்
இப்பகுதிகளிடையே குறிப்பிடத்தக்க போக்குவரத்துக்களும், வணிகமும் நடைபெற்றிருப்பதைக்
காட்டுகிறது 

• செப்பு முதலில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டதாகத்
தெரியவில்லை. எனினும், தகரம் மற்றும் வேறு உலோகங்களுடன் சேர்த்துக் கலப்புலோகம் ஆக்குவது
விரைவாகவே தொடங்கிவிட்டது. செம்பைப் பயன்படுத்திய நாகரீகம் ஹரப்பா நாகரிகம் ஆகும். 

இரும்புக் காலம்: 

• இரும்புக் காலம் என்பது
மனிதப் பண்பாட்டு வளர்ச்சியின் ஒரு காலகட்டம் ஆகும்.இக்காலகட்டத்திலே இரும்புக் கருவிகள்
&  ஆயுதங்களின் பயன்பாடு முன்னணியிலிருந்தது.
இரும்பை பயன்படுத்திய நாகரீகம் வேதகால நாகரீகம். 

இரும்புக்காலத்தின் வகைகள்: 

1. வெண்கலக் காலம் வழக்கிழந்த பகுதியும் இரும்புக்
காலம் தொடங்கிய பகுதியும் (கி.மு. 1400 முதல் கி.மு. 1300 வரை) 

2. செம்மையான இரும்புக் காலம்(கி.மு. 1300 முதல் கி.பி.
500 வரை) 

• பழைய இரும்புக்காலம் (கி.மு.
1300 முதல் கி.மு. 475 வரை) 
• மத்திய
இரும்புக்காலம் (கி.மு. 475 முதல் கி.பி. 250 வரை) 
• புதிய இரும்புக்காலம் (கி.பி. 250 முதல் கி.பி. 500 வரை) 

இரும்புக்காலத்தின்
போது தரமிக்கக் கருவிகளையும் ஆயுதங்களையும் உருவாக்க எஃகு பயன்படுத்தப்பட்டது. 
இவை
இரும்பும் கரிமமும் சேர்ந்த கலவையாக தயாரிக்கப்பட்டன. கரிமத்தின் அளவு கருவியின் எடையில்
0.3 சதவீதத்தில் இருந்து 1.2 சதவீதம் வரை கலக்கப்பட்டது. எஃகை விட குறைந்த கரிம அளவு
கொண்ட தேனிரும்புக் கருவிகள் தயாரிக்கப்பட்டாலும் அவை குறைந்த அளவு கடினத் தன்மையுள்ள
கருவிகளுக்காகவே பயன்படுத்தப்பட்டது 

உலோக கலவைகள்: 

இரும்பு + குரோமியம்  = சில்வர் 
செம்பு + வெள்ளீயம் = வெண்கலம் 
செம்பு
+ துத்தநாகம் = பித்தளை 
இரும்பு + மாங்கனீசு = எஃகு 

• வேத இலக்கியங்களில் இரும்பு பற்றி அடிக்கடி குறிக்கப்படுகிறது. 

• சென்னையை அடுத்துள்ள பெரும்புதூர் என்ற
இடத்தில் கற்கருவிகளுடன் இரும்பினால் ஆன கருவிகளும் கிடைத்துள்ளன. 

• தென்னிந்தியாவில் இரும்புக் காலமும் பெருங்கல்
காலமும் (மெகாலிதிக்) சமகாலம் எனக் கருதப்படுகிறது. மெகாலித்க் என்றால் பெரிய கல் என்று
பொருள். 

• பெருங்கல் என்ற சொல்லுக்கு
நீத்தார் நினைவுச் சின்னம் என்பது பொருள். கல்லறையின் மேல் சுற்றி அடுக்கப்பட்ட கற்களை
இது குறிக்கிறது அத்தகைய கல்லறைகள் தென்னிந்தியாவில் ஏராளமாகக் கிடைத்துள்ளன. 

• கர்நாடகத்திலுள்ள ஹல்லூர், மாஸ்கி ஆந்திரப்
பிரதேசத்திலுள்ள நாகார்ஜின கொண்டா, தமிழ்நாட்டில் ஆதிச்ச நல்லூர் ஆகிய இடங்கள் அவற்றில்
குறிப்பிடத்தக்கவை. •  கல்லறைக் குழிகளில் கருப்பு
சிகப்பு வண்ணத்தாலானப் பானையோடுகள், இரும்பாலான மண்வெட்டி மற்றும் அரிவாள், சிறு ஆயுதங்கள்
போன்றவை காணப்படுகின்றன.
giphy 46 Tamil Mixer Education

FINAL WHATASPP 87 Tamil Mixer Education

Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -