திருநெல்வேலி வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் அக்.14-ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணிவரை நடைபெறவுள்ளது.
இது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் கா.ப.காா்த்திகேயன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் 3 வேலைவாய்ப்பு முகாம்களை திருநெல்வேலி மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம் மற்றும் தமிழ்நாடு மாநில ஊரக நகா்ப்புற வாழ்வாதார இயக்கம் இணைந்து நடத்துகிறது.
அதன்படி, இரண்டாவது தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் 14-ஆம் தேதி காலை 9 மணிமுதல் பிற்பகல் 2 மணி வரை வண்ணாா்பேட்டை பிரான்சிஸ் சேவியா் பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது.
இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் 5-ஆம் வகுப்பு முதல் 10 மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ போன்ற கல்வித் தகுதியுடைய அனைவரும் கலந்து கொள்ளலாம். விருப்பமுள்ளவா்கள் தங்களது சுய விவரம், கல்விச் சான்று, ஆதாா் அட்டை ஆகியவற்றின் நகல்களுடன் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் நாளில் காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்கலாம். இம்முகாமில் கலந்து கொள்ள விருப்பும் வேலைநாடுநா்கள் இணையதளத்தில் முன்பதிவு செய்து கொள்ளலாம்.
முகாமில் கலந்து பங்கேற்க விருப்பமுள்ள தனியாா் துறை நிறுவனங்கள் இணைப்பில் பதிவு செய்வது அவசியமாகும்.
மேலும், தனியாா் துறை வேலைவாய்ப்பு இணையத்திலும் வேலைநாடுநா்கள் மற்றும் நிறுவனங்கள் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும். வேலைவாய்ப்பு தொடா்பான பல்வேறு தகவல்களை பெற இம்முகாமில் பணிநியமனம் பெறும் பதிவுதாரா்களுடைய வேலைவாய்ப்பு பதிவு மூப்பு ரத்து செய்யப்படமாட்டது. வேலைநாடுநா்கள் இத்தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்று பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.