October 12, 2019 Current Affairs – Refer from Hindu &
Dinamani Newspapers
- அமைதிக்கான நோபல் பரிசு 2019.ல் யாருக்கு அறிவிக்கப்பட்டது? அபி முகமது அலி (வயது: 43; தற்போதைய எத்தியோப்பியா பிரதமர்)
- தமிழக காவலர்களின் குடும்ப பிரச்சனையை தீர்க்க தமிழக அரசு தொடங்கியுள்ள திட்டம் என்ன? ஆனந்தம் திட்டம்
- சந்திராயன் 2 மூலம் அனுப்பப்பட்ட ஆர்பிட்டர் எத்தனை ஆண்டுகள் நிலவை சுற்றி ஆராய்ச்சி செய்யும் என ISRO தெரிவித்துள்ளது? 7 ஆண்டுகள்
- தனிநபர் தகவல்களை பாதுகாக்க தகவல் பாதுகாப்பு ஆணையம் ஏற்படுத்தப்பட வேண்டும் என பரிந்துரைத்த குழுவின் பெயர் என்ன? PN Sri Krishna
- கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்டவர் யார்? S. மணிக்குமார்
- தேசிய அஞ்சல் வாரம் – அக்டோபர் 9 – 15
- உலக அஞ்சல் நாள் – அக்டோபர் 9
- சேமிப்பு வங்கி நாள் – அக்டோபர் 10
- அஞ்சல் ஆயுள் காப்பீட்டு நாள் – அக்டோபர் 11
- தபால் தலை நாள் – அக்டோபர் 12
- வணிக மேம்பாட்டு நாள் – அக்டோபர் 13
- அஞ்சல் நாள் – அக்டோபர் 14
- 1965.ல் முதல் முறையாக விண்வெளியில் நடைபோட்ட ரஷ்ய விண்வெளி வீரர் யார்? அலெக்ஸி லியோனோவ்
- 2017 – 18. ஆண்டிற்கான 31 வது நாடு ஒற்றுமைக்கான இந்திராகாந்தி விருதுக்கு தேர்வு செய்யப்பட்டவர் யார்? சாண்டி பிரசாத் பட்
- தேசிய ஓபன் தடகள சாம்பியன்ஷிப்பில் 100m தேசிய சாதனையை முறியடித்தவர் யார்? டூட்டி சந்த்
- தொடர்ந்து 12வது ஆண்டாக பணக்கார இந்தியர் பட்டியலில் முதலிடம் பிடித்தவர் யார்? முகேஷ் அம்பானி
- எந்த நாடு இனிப்பு குளிர்பானங்களுக்கான விளம்பரங்களை தடை செய்து உள்ளது? சிங்கப்பூர்
- உலகின் முதல் ரோபோ கப்பலை வடிவமைத்த நாடு எது? இங்கிலாந்து
- நாளைய விஞ்ஞானி என்னும் மாணவர்களுக்கான அறிவியல் திருவிழா நடைபெற்ற இடம் எது? சென்னை – Vellore Institute of Technology
- மும்பை பல்கலைக்கழகத்தின் முதல் திருநங்கை பட்டதாரி யார்? சந்தோஷ் லோண்டே (எ) ஸ்ரீ தேவி
- கிங் 11 பஞ்சாப் அணியின் தலைமை பயிற்சியாளராக சமீபத்தில் நியமிக்கப்பட்டவர் யார்? அணில் கும்ப்ளே
- சீன அதிபர் ஜி ஜின் பிங் எத்தனை முறை இதுவரை இந்தியா வந்துள்ளார்? 3 முறை (2014, 2016, 2019)
- கிரிக்கெட் பிதாமகன் என்று அறியப்படுபவர் யார்? டான்பிராட்மேன் (ஆஸ்திரேலியா)
- செவ்வாய் கிரகத்தை ஆராய விண்ணில் மங்கள்யான் விண்கலத்தை ISRO செலுத்திய நாள் எது? 2015 நவம்பர் 5