நாமக்கல்லில் வரும் 13ம் தேதி வண்ண மீன் வளர்ப்பு குறித்து இலவச பயிற்சி முகாம் நடக்கிறது. இதுகுறித்து நாமக்கல் வேளாண் அறிவியல் நிலைய தலைவர் வேல்முருகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாமக்கல் வேளாண் அறிவியல் நிலையத்தில் வரும் 13ம் தேதி காலை 10 மணிக்கு, வண்ண மீன் வளர்ப்பு குறித்து, ஒரு நாள் இலவச பயிற்சி நடைபெற உள்ளது.
முகாமில் வண்ண மீன் வளர்ப்பிற்கேற்ற இடம் தேர்வு செய்தல், வளர்ப்பு முறைகள், இனப்பெருக்கம் செய்யும் முறைகள், நீர் மேலாண்மை, உணவு மேலாண்மை, செயற்கை உணவு தயாரிக்கும் முறைகள், கண்ணாடி தொட்டி தயாரிக்கும் முறைகள், பொருளாதாரம் மற்றும் விற்பனை முறைகள் குறித்து விளக்கி கூறப்படுகிறது.