செவிலியர் பயிற்சி
வகுப்பு
மேட்டுப்பாளையத்தில், தனியார் மருத்துவமனையில், செவிலியர் பயிற்சி இலவச
வகுப்பு துவக்கப்பட்டது.
தமிழக
அரசின் திறன் மேம்பாட்டு கழகம், மேட்டுப்பாளையம் சூரியா
மருத்துவமனை, சாய் டிரஸ்ட்
ஆகியவை சார்பில், செவிலியர்
பயிற்சி இலவச வகுப்பு
துவக்கியது. சூர்யா மருத்துவமனை குழந்தைகள் நல சிறப்பு
டாக்டர் சுதாகர் தலைமை
வகித்தார். மகளிர் மற்றும்
மகப்பேறு டாக்டர் புவிதா
சுதாகர் முன்னிலை வகித்தார்.மனநல
பயிற்சியாளர் அருள்வடிவு முனுசாமி வரவேற்றார். கோவை
வேலைவாய்ப்பு மற்றும்
பயிற்சித் துறையின் உதவி
இயக்குனர் ராஜேஸ்வரி, பயிற்சி
வகுப்புகளை துவக்கி வைத்து,
மாணவியருக்கு உபகரணங்கள் வழங்கினார்.
பயிற்சி
வகுப்பு, 54 நாட்கள் நடத்தப்படும். 30 பெண்கள் பங்கேற்றனர். பயிற்சியை
நிறைவு செய்வோருக்கு, சான்றிதழ்
மற்றும் அரசு, தனியார்
மருத்துவமனையில் பணிபுரிய
வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
செவிலியர்
பயிற்சியாளர் ரெக்சலின்
உன்னதா நன்றி கூறினார்.
பயிற்சியில் சேர விரும்புவோர், 63847 68468 என்ற எண்ணில்
தொடர்பு கொள்ளலாம்.