இனி தமிழிலும்
இன்ஜினியரிங் படிக்கலாம் – புதிய தேசிய
கல்விக்கொள்கை
மத்திய
அரசு 2020-ஆம் ஆண்டு
நவம்பர் மாதம் புதிய
தேசிய கல்வி கொள்கையை
வெளியிட்டது. இந்த கல்வி
கொள்கையின் அடிப்படையில் நாட்டில்
உள்ள அனைத்து பொறியியல்
கல்லூரிகளிலும் தாய்மொழி
வழியாக படிக்க வாய்ப்பினை உண்டாக்கி தருகிறது. இதற்காக
அனைத்திந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சில் ஒப்புதல்
வழங்கியுள்ளது.
இந்த
திட்டம் மூலமாக மாணவர்கள்
அவர்களின் தாய்மொழியிலேயே கல்வி
கற்கலாம். அதுதவிர அவர்கள்
மற்ற மொழியில் கல்வி
கற்கவும் ஊக்குவிக்கப்படுகின்றனர். இதனை
அமல்படுத்தப்பட உள்ள
கல்லூரிகள் முதலில் இதற்கான
கலந்தாய்வில் கலந்து
கொள்ள வேண்டும். அதில்
பிராந்திய மொழிகள் செயல்பட
அந்த கல்லூரிகளுக்கு தேவையான
வசதிகள் உள்ளதா என
ஆராயப்பட்டு அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த
திட்டத்தை செய்லபடுத்திய பின்னர்
மாணவர்கள் இந்த மொழியை
கட்டாயமாக படிக்க வேண்டும்
என கல்லூரிகள் நிர்பந்திக்க கூடாது. மாணவர்கள் தங்களுக்கு விருப்பமான மொழிகளில் பாடங்களை
கற்கலாம். இதற்காக புத்தங்களை மொழிபெயர்க்கும் பணிகள்
தீவிரமாக நடைபெற்று வருவதாக
தெரிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 8 மொழிகளான தமிழ், பெங்காலி,
குஜராத்தி, ஹிந்தி, கன்னடம்,
மலையாளம், மராத்தி, தெலுங்கு
மொழிகளில் புத்தகங்கள் தயார்
செய்யப்பட்டுள்ளன.
இந்த
திட்டத்தை செயல்படுத்த பல்வேறு
ஆசிரியர்கள் தேவைப்படுவதால் தற்போது
வரை 130 ஆசிரியர்கள் இந்த
பணியில் ஈடுபட உள்ளனர்.
இது குறித்து நாடு
முழுவதும் உள்ள மாணவர்களிடம் கருத்து கேட்பு கூட்டம்
நடத்தப்பட்டது. அதில்
83 ஆயிரம் மாணவர்களில் 44 சதவிகிதம்
பேர் தாய்மொழியில் படிக்க
ஆர்வம் காட்டியுள்ளனர். தாய்மொழியில் பாடங்களை கற்பதன் மூலமாக
பாடங்கள் மாணவர்களிடம் எளிதில்
சென்றடையும் நிலை உள்ளது.
மத்திய
அரசின் முன்னணி கல்வி
நிறுவனமான ஐஐடியில் படிக்கும்
மாணவர்களிடம் இது
குறித்து கேட்ட போது
20 சதவிகிதம் பேர் இதற்கு
சம்மதம் தெரிவித்துள்ளனர். இதுவரை
ஹிந்தி மொழியில் உள்ள
130 பாட பிரிவுகளுக்கான புத்தகங்களும், தமிழில் உள்ள 94 பாட
பிரிவுகளுக்கான புத்தகங்களும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மற்ற
மொழி பாட பிரிவுகளுக்கான புத்தகங்கள் “ஸ்வயம்” இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. பொறியியல்
படிப்புகளில் உள்ள
சில ஆங்கில வார்த்தைகளை அடைப்புக்குறிக்குள் குறிப்பிடப்பட வேண்டும் என மொழிபெயர்ப்பாளர்களுக்கு மத்திய கல்வித்துறை அமைச்சர் ரமேஷ் பொக்ரியால் அறிவுறுத்தியுள்ளார்.