TAMIL MIXER
EDUCATION.ன்
தமிழக செய்திகள்
இனி தமிழ் வழி சான்றிதழை எளிதாக பெறலாம்
இது குறித்து பள்ளிக்கல்வி ஆணையர் சுற்றறிக்கை:
தமிழக அரசு தமிழ் மொழியை வளர்க்கும் நோக்கில் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தமிழ் மொழியில் கல்வி பயின்றவர்களுக்கு
அரசு
வேலைவாய்ப்பில்
முன்னுரிமை
மற்றும்
இட
ஒதுக்கீடு
அளிக்கப்பட்டு
வருகிறது.
அதனால் அரசு வேலைக்கு விண்ணப்பிக்கும்
நபர்கள்
தங்களின்
தமிழ்
வழி
சான்றிதழை
பதிவேற்றம்
செய்ய
வேண்டும்
என்று
அறிவுறுத்தப்பட்டது.
இதனையடுத்து
கடந்த
மாதங்களில்
நடைபெற்ற
குரூப்
2 & 2A, குரூப்
4 ஆகிய
தேர்வுகளுக்கு
விண்ணப்பிக்க
ஏராளமான
நபர்கள்
தாங்கள்
பயின்ற
பள்ளிகளில்
நேரடியாக
சென்று
தமிழ்
வழி
சான்றிதழ்
கோரி
விண்ணப்பித்து
வந்தனர்.
நேரடியாக பள்ளிக்கு சென்று தமிழ் வழி சான்றிதழை பெறும் நிலை மட்டுமே இருந்து வந்தது. இதனால் கால வியரமும், வீண் அலைச்சலும் ஏற்பட்டது. இதனை தடுக்கும் வகையில் PSTM எனப்படும் தமிழ் வழி சான்றிதழை ஆன்லைன் வாயிலாக பெற பள்ளிக்கல்வித்துறை
நடவடிக்கைகளை
மேற்கொண்டுள்ளது.
அதன்படி இனி வரும் காலங்களில் ஆன்லைன் வாயிலாக மட்டுமே தமிழ் வழி சான்றிதழ் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து
பள்ளிக்
கல்வி
ஆணையர்
சுற்றறிக்கை
அனுப்பியுள்ளார்.
அதில் தமிழ் வழி சான்றிதழை ஆன்லைன் வாயிலாகவே மட்டுமே வழங்க வேண்டும். எக்காரணம் கொண்டும் தலைமை ஆசிரியர் கையினால் பூர்த்தி செய்து சான்றிதழை வழங்க கூடாது. மேலும் பெறப்பட்ட விண்ணப்பங்களை
தலைமையாசிரியர்
அதன்
நம்பகத்தன்மையை
சரிபார்த்து
மின்
கையொப்பம்
இட
வேண்டும்.
ஒரு வேளை விண்ணப்பதாரரின்
விவரங்கள்
தவறாக
இருந்தால்
அதனை
ஆன்லைன்
வாயிலாகவே
தலைமை
ஆசிரியர்
நிராகரித்து
விடலாம்
என்று
சுற்றறிக்கையில்
குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த PSTM சான்றிதழ் வழங்குவது குறித்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்கள் தலைமை ஆசிரியர்களுக்கு
தகுந்த
அறிவுரைகளை
வழங்க
உத்தரவிடப்பட்டுள்ளது.
PSTM Certificate Verification Details PDF