HomeBlogஇனி ஆப் மூலம் மின் கட்டணம் ஈஸியா செலுத்தலாம்
- Advertisment -

இனி ஆப் மூலம் மின் கட்டணம் ஈஸியா செலுத்தலாம்

now pay electricity bills through the app

இனி ஆப்
மூலம்
மின் கட்டணம் ஈஸியா
செலுத்தலாம்

தமிழகத்தில் வீடுகளுக்கான மின்சாரத்தில் 100 யூனிட் வரை இலவசமாக
வழங்கப்படுகிறது. அதற்கு
மேல் பயன்படுத்தும் மின்சாரத்திற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது.

அதனால்
100
முதல் 200 யூனிட் வரை,
200
முதல் 500 யூனிட்வரை, 500 யூனிட்டிற்கு மேல் என்று பல
விகிதங்களில் மின்கட்டணம் கணக்கிடப்பட்டு நுகர்வோரிடமிருந்து வசூலிக்கப்படுகிறது.

கடந்த
மே மாதம் மின்
கட்டணத்தை பொதுமக்களே சுயமாக
கணக்கீடு செய்து கொள்ளலாம்
என மின்சார வாரியம்
அறிவித்த நிலையில், அதை
போட்டோ எடுத்து வாட்ஸ்
அப் வழியாக மின்
வாரிய அதிகாரிகளுக்கு அனுப்பி,
மின் கட்டணத்தை இணைய
வழியில் செலுத்தி கொள்ளலாம்
என்று தெரிவித்தது. இந்நிலையில் மின் கட்டணத்தை நுகர்வோர்
கணக்கிடும் வகையில் செயலி
ஒன்று வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன்
மூலம் மின் கட்டணமத்தை நுகர்வோரே கணக்கீடு செய்யப்படும் நடைமுறை இன்று முதல்
அமலுக்கு வருகிறது. சோதனை
முறையில் தமிழ்நாடு மின்சார
வாரியம் இந்த திட்டத்தை
அமலுக்கு கொண்டு வரும்
நிலையில் முதற்கட்டமாக சென்னை,
வேலூர் மண்டலங்களில் சோதனை
முறையில் நடைமுறைக்கு வந்துள்ளது.

செயலியில்
மீட்டர் புகைப்படத்தை பதிவேற்றம் செய்தால் ரசீது வந்துவிடும் என்று இந்த மின்
கட்டண ரசீது நுகர்வோருக்கு குறுஞ்செய்தி வாயிலாக
அனுப்பப்படும் என்றும்
தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த
செயலியை செல்போனில் பதிவிறக்கம் செய்து கட்டணத்தை கணக்கீடு
செய்யலாம் எனவும் தமிழ்நாடு
மின் வாரியம் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -