Blog latest news

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அறிவிப்பு – வருவாய் ஈட்டும் வசதி

Instagram Tamil Mixer Education

இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கு அறிவிப்புவருவாய் ஈட்டும்
வசதி

நடப்பு
காலத்தில் சிறியவர்கள் முதல்
பெரியவர்கள் வரை உள்ள
அனைத்து தரப்பு வயதினரும்
சமூக வலைத்தளங்களில் மூழ்கி
வருகின்றனர். மேலும் மக்கள்
அனைவராலும் அதிக அளவில்
கவரப்பட்ட செயலி தான்
டிக் டாக். இந்த
செயலி இந்திய நாட்டில்
அதிக பயனாளர்களால் பயன்படுத்தப்பட்டது. பின்பு இந்த
செயலிக்கு மத்திய அரசு
தடை விதித்தது. இந்த
செயலி இல்லாத குறையினை
போக்கும் வகையில் இன்ஸ்டாகிராம் செயலி புதிய வசதி
ஒன்றை அறிமுகம் செய்தது.

டிக்
டாக் செயலி போல்
இன்ஸ்டாகிராம் ரீல்ஸ்
என்னும் வசதி அறிமுகம்
செய்தது. அதில் பயனாளர்கள் குறு வீடியோக்கள் பதிவிறக்கம் செய்து வரலாம். இந்த
வசதி இன்ஸ்டாகிராம் பயனாளர்களை வெகுவாக கவர்ந்தது. மேலும்
தற்போது இந்த வசதியை
சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி பயன்படுத்தி வருகின்றனர். தற்போது இன்ஸ்டாகிராம் மூலம் வருவாய் ஈட்டலாம்
என்று தகவல் ஒன்று
வெளியாகியுள்ளது. இது
குறித்த தகவலை அலிசான்ட்ரா பலூசி என்பவர் பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறியதாவது:

இன்ஸ்டாகிராமில் குறு வீடியோக்களை உருவாக்கும் படைப்பாளிகளுக்கு இன்ஸ்டாகிராம் நிறுவனம் போனஸ் வழங்க
திட்டமிட்டுள்ளதாக அவர்
தெரிவித்தார். புதிய
வீடியோக்களை வெளியிடும் பொழுது
இந்த போனஸ் வழங்கப்படும், பணம் ஈட்டுவதற்கு வயது
வரம்பு உள்ளது என்றும்
அவர் தெரிவித்தார். மேலும்
பார்வையாளர்கள் எண்ணிக்கை,
சேமிப்பு எண்ணிக்கை போன்றவையும் போனஸுக்கு பரிசீலிக்கப்படும் என்றும்
இது குறித்து இன்ஸ்டாகிராம் இன்னும் அதிகாரபூர்வ அறிவிப்பு
வெளியிடவில்லை என்றும்
அவர் தெரிவித்தார்.

Avatar

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]