MCA, MBA, ME, M.Arch படிப்புக்களுக்கு நுழைவு தேர்வு
தேதி அறிவிப்பு
முதுநிலை
படிப்புக்கான தமிழ்நாடு
பொது நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பங்கள் மார்ச்
30 முதல் ஏப்ரல் 18 மாலை
4 மணி வரை ஆன்லைனில்
வெளியிடப்பட உள்ளன.
இந்த
விண்ணப்பங்களை பூர்த்தி
செய்து ஆன்லைன் மூலமே
சமர்ப்பிக்கலாம் என
அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அண்ணா பல்கலைக்கழகம் செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில்:
அண்ணா
பல்கலைக்கழகத்தின் துறைகள்,
அதன் உறுப்புக்கல்லூரிகள், அண்ணா
பல்கலைக்கழகத்தின் மண்டல
கல்லூரிகள், அண்ணாமலை பல்கலைக்கழகம், அரசு மற்றும் அரசு
உதவிப்பெறும் சுயநிதி
பொறியியல், கலை மற்றும்
அறிவியல் கல்லூரியில் உள்ள
எம்.பி.ஏ,
எம்.சி.ஏ,
எம்.இ, எம்.டெக்,
எம்.ஆர்க், எம்.பிளான்
ஆகிய முதுகலைப் பட்டப்படிப்புகளில் மாணவர்கள் 2022-2023ஆம்
கல்வியாண்டில் சேரலாம்.
அத்துடன்
வேறு சில பல்கலைக்கழகம் மற்றும் தனியார் கல்லூரிகள் டான்செட் மதிப்பெண் அடிப்படையில் மாணவர்கள் சேரலாம் என
அறிவித்துள்ளது.
இந்த
நுழைவுத்தேர்வினை எழுதுவதன்
மூலம் எம்.பி.ஏ,
எம்.சி.ஏ
மற்றும் எம்.இ,
எம்.டெக், எம்.ஆர்க்,
எம்.பிளான் ஆகிய
பட்டப் படிப்புக்களில் சேரலாம்.
இதற்கு
மார்ச் 30 முதல் ஏப்ரல்
18 வரை https://tancet.annauniv.edu/tancet/
என்ற இணையதளம் மூலம்
ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம், ஆன்லைனில்
விண்ணப்பிக்கும் போது
மின்னஞ்சல் முகவரி, மொபைல்
எண்கள் உள்ளிடப்பட வேண்டும்.
இதன்
பிறகு தேர்வுக் கட்டணம்
செலுத்த வேண்டும். இந்த
கட்டணத்தையும் ஆன்லைன்
மூலம் செலுத்தலாம்.
ஆன்லைனில்
விண்ணப்பித்தவர்களுக்கான தேர்வு
நுழைவுச்சீட்டு மே
2ம் தேதி ஆன்லைனில்
வெளியிடப்படும். எம்.சி.ஏ.
படிப்பிற்கு மே 14ம்
தேதி காலை 10 மணி
முதல் 12 மணி வரையும்,
எம்.பி.ஏ.படிப்பிற்கு மே 14ம் தேதி
பிற்பகல் 2.30 மணி முதல்
4.30 மணி வரையும், எம்.இ,
எம்.டெக், எம்.ஆர்க்,
எம்.பிளான் படிப்பிற்கு மே 15ம் தேதி
காலை 10 மணி முதல்
12 மணிவரையும் நுழைவுத் தேர்வு
நடத்தப்பட உள்ளது.
இந்த
தேர்வுகளை நேரடியாக எழுத
வேண்டும். இந்த தேர்வுகள்
சென்னை, கோயம்புத்தூர், சிதம்பரம்,
திண்டுக்கல், ஈரோடு, காரைக்குடி, மதுரை, நாகர்கோவில், சேலம்,
தஞ்சாவூர், திருநெல்வேலி, திருச்சி,
வேலூர், விழுப்புரம் ஆகிய
14 நகரங்களில் தேர்வு நடத்தப்படும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.