இன்ஷூரன்ஸ் புகார்களுக்கு இனி விரைந்து தீர்வு
இன்ஷூரன்ஸ் பாலிசிதாரர்கள் தங்கள்
புகார்களுக்கு விரைவில்
தீர்வு காண, இனி
புகார்களை ஆன்லைன் மூலம்
தெரிவிக்கும் வசதியை
ஐ.ஆர்.டி.ஏ.ஐ
அறிமுகம் செய்துள்ளது.
காப்பீட்டு சேவை குறைபாடு தொடர்பான
புகார்களுக்கு விரைந்து
தீர்வு காண்பதற்கு வசதியாக
காப்பீட்டுத் தீர்ப்பாயம் விதிமுறைகளில் 2017 (Ombudsman
Rules 2017) மத்திய அரசாங்கம் திருத்தம்
கொண்டு வந்துள்ளது.
காப்பீட்டு நிறுவனங்கள், பாலிசிதாரரின் புகாருக்கு குறிப்பிட்ட நாள்களுக்குள் தீர்க்காவிட்டால் அல்லது அந்தத்
தீர்ப்பில் அதிருப்தி அடைந்தால்,
ஐ.ஆர்.டி.ஏ.ஐ–ன்
நுகர்வோர் விவகாரத் துறையின்
குறை தீர்க்கும் பிரிவை
அணுகலாம்.
புதிய
விதிமுறைகளின்படி பாலிசிதாரர்களின் புகார் நிலையை
ஆன்லைனில் கண்காணிக்க இது
உதவுகிறது. மேலும், ஒம்பூட்ஸ்மேன், வீடியோ கான்பரன்சிங் மூலம்
விசாரணை செய்யலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்ஷூரன்ஸ் புகார் செய்வது எப்படி?: Click
Here