NIFT
–
ஏப்ரல் 4ல் பேராசிரியர்களுக்கான எழுத்துத் தேர்வு
NIFT எனப்படும் தேசிய ஆடை
அலங்காரத் தொழில்நுட்பக் கல்வி
நிறுவனத்தில் இளங்கலை
ஃபேஷன் டெக்னாலஜி மற்றும்
இளங்கலை வடிவமைப்பு உள்ளிட்ட
ஏராளமான படிப்புகள் உள்ளன.
மத்திய ஜவுளித்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் நிஃப்ட்
தேர்வுக்கான கல்வி நிறுவனங்கள் சென்னை, மும்பை, கொல்கத்தா,
டெல்லி, பெங்களூரு உட்பட
நாட்டின் 16 முக்கிய நகரங்களில் உள்ளன.
இந்த
படிப்பு ஐஐடி.,யில்
பொறியியல் படிப்பதற்கு இணையான
படிப்பாக கருதப்படுகிறது. இந்தியாவில் 16 இடங்களில் காலியாக உள்ள
உதவி பேராசிரியர் பணிகளுக்கான எழுத்துத் தேர்வு ஏப்ரல்
மாதம் 6 ஆம் தேதி
டெல்லியில் மட்டுமே நடைபெறும்.
நாடு முழுவதிலிருந்து 1304 பேர்
இந்த தேர்வில் பங்கேற்க
உள்ளனர்.
தற்போது
கொரோனா இரண்டாம் அலை
தாக்கம் பரவி வருவதால்
டெல்லிக்கு பயணம் செய்வது
கடினமான ஒன்றாகும். எனவே
சென்னை, கோவை, மதுரை
மாவட்டத்தை சேர்ந்தவர்கள் புகார்
தெரிவித்துள்ளனர். மேலும்
தேர்வு மையங்களில் மாற்றம்
வேண்டும் என கோரிக்கை
வைத்துள்ளனர்.