இளங்கலை / முதுகலை பட்டப்படிப்பு முடித்து விட்டு ஊடகத்தில் சாதிக்கும் ஆர்வம் கொண்டவரா நீங்கள்?
செய்தியாளர்/ ஒளிப்பதிவாளர்/ செய்தி தயாரிப்பாளர்/ காட்சி தொகுப்பாளர்/ டிஜிட்டல் செய்தியாளர் ஆகிய துறைகளில் ஒரு மாத கால பயிற்சி வழங்கப்படும்.
யார் விண்ணப்பிக்கலாம்?
இளங்கலை/முதுகலையில் தமிழ், ஆங்கிலம், விஷுவல் கம்யூனிகேஷன், இதழியல், சமூக பணி, வரலாறு ஆகிய பிரிவுகளில் பட்டம் பெற்றவராக இருக்க வேண்டும். 2023 ஆண்டு இளங்கலை அல்லது முதுகலை படிப்பு முடித்திருக்க வேண்டும்.
எப்படி தேர்வு செய்யப்படுவீர்கள்?
குறிப்பிட்ட தேதியில் நடைபெறும் எழுத்து தேர்வு மற்றும் நேர்காணலில் வெற்றி பெறுவார்கள் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவார்கள்.
பணி வாய்ப்பு?
பயிற்சி காலத்தில் சிறப்பாக செயல்படுபவர்களுக்கு நியூஸ் 7 தமிழில் பணி வாய்ப்பு வழங்கப்படும். தேர்வாகாதவர்களுக்கு பயிற்சிக்கான சான்றிதழ் தரப்படும்.
எழுத்து தேர்வுக்கு தயாராவது எப்படி?
பொது அறிவு/ சமூகம், அரசியல் சார்ந்த செய்திகள் குறித்து கேள்விகள் இடம்பெறும்.
நேர்முகத் தேர்வு?
நீங்கள் எந்த பிரிவை தேர்ந்தெடுக்க விரும்புகிறீர்களோ அது குறித்து கேள்விகள் நடைபெறும்.
நுழைவுத் தேர்வு நடைபெறும் இடம்: காந்தி மியூசியம், மதுரை
நுழைவுத் தேர்வு தேதி: ஆகஸ்ட் 24
நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு நேர்காணல் ஆகஸ்ட் 25 நடைபெறும்
குறிப்பு: பயிற்சியில் பெண்களுக்கு 50% இட ஒதிக்கீடு உண்டு ஒரு மாத பயிற்சி காலத்திற்கு ஊக்கத் தொகை வழங்கப்படும்.
நுழைவு தேர்வுக்கான ஹால் டிக்கெட்-ஐ பெற கீழ்காணும் E – Mail க்கு உங்களது சுய விவர குறிப்பை (Bio Data) அனுப்பிவையுங்கள் . target@news7tamil.live