மின்சார வாகனம்
தொடர்பான புதிய முதுநிலைப் படிப்பு
இது தொடர்பாக சென்னை ஐஐடி வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த
ஆண்டு ஐஐடி–ல்
மின் வாகனம் தொடர்பான
புதிய முதுநிலைப் பட்டப்
படிப்பு கொண்டுவரப்படுகிறது. இரு
துறை சார்ந்த இரட்டைப்
படிப்பாக இது அறிமுகப்படுத்தப்படும்.
இந்தப்
படிப்பில் பி.டெக்.
3-ம் ஆண்டு படிக்கும்
மாணவர்கள் சேரலாம். மொத்தம்
25 பேர் சேர்த்துக் கொள்ளப்படுவர். மின்சார வாகனவடிவமைப்பு, தகவல்
தொடர்புஉள்ளிட்ட அம்சங்கள்
அடங்கியதாகவும், மின்சார
வாகன தயாரிப்புமேம்பாட்டுத் துறையில்
வேலைவாய்ப்பு பெறும்
வகையிலும் இந்தப் படிப்பு
அமைந்திருக்கும்.
ஐஐடி–ல்
பி.டெக். 3-ம்
ஆண்டு பயிலும் மாணவர்கள்
இந்தப் படிப்பில் சேர்ந்து
5 ஆண்டுகள் படித்தால், அவர்களுக்கு ஒருங்கிணைந்த எம்.டெக்.
பட்டம் வழங்கப்படும். இந்தப்
படிப்புக்கான சேர்க்கை
ஜனவரியில் தொடங்கும். இவ்வாறு
அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிய
படிப்பின் முக்கிய அம்சங்கள்
குறித்து இன்ஜினீயரிங் டிசைன்
துறைத் தலைவர் டி.அசோகன்
கூறும்போது, “மின்சார வாகனப்
பொறியாளர்களுக்குத் தேவைப்படும் அனைத்து திறமைகளையும் ஏற்படுத்திக் கொடுக்கும் வகையில், 8 துறைகளின்
கூட்டுமுயற்சியால் இந்தப்
படிப்பு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
மின்
வாகனங்களுக்கான அடிப்படை
விஷயங்கள், பேட்டரிகள், மோட்டார்கள் என அனைத்துத் துறைகளிலும் ஆழ்ந்த அறிவுபெறும் வகையில்,
மிகுந்த கவனத்துடன் இதற்கான
பாடத் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.