TAMIL MIXER EDUCATION.ன்
விவசாய
செய்திகள்
மானிய விலையில்
புதிய மின் மோட்டார்
பம்புகள் – நாகப்பட்டினம்
இதுகுறித்து கலெக்டர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகளுக்கு புதிய
மின்மோட்டார் பம்பு
செட்டுகள் மற்றும் திறன்
குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி
புதிய மின்மோட்டார் பம்பு
செட்டுகள் மானியத்தில் அமைத்துக்
கொடுக்கும் திட்டம் வேளாண்மைப் பொறியியல் துறை வாயிலாக
செயல்படுத்தப்பட உள்ளது.
இறைக்கிற
கிணறு சுரக்கும் என்ற
பழமொழிகு ஏற்ப கிணறுகளிலிருந்து பாசனத்திற்கு நீரை
இறைப்பதற்காக விவசாயிகள் பயன்பெறும் வகையில் மூன்று
ஏக்கர் வரை நிலம்
வைத்திருக்கும் சிறு,
குறு விவசாயிகளுக்கு பாசன
நீரை இறைத்திட புதிய
மின்மோட்டார் பம்பு
செட்டுகள் வாங்கவும், திறன்
குறைந்த பழைய மின்மோட்டார் பம்ப் செட்டுகளை மாற்றி
புதிய மின்மோட்டார் பம்பு
செட்டுகள் பொருத்தவும் வழிவகை
செய்யப்பட்டுள்ளது. விவசாயிகள் பயன் பெறும் வகையில்
புதிய மின்மோட்டார் பம்ப்
செட்டுகள் வாங்க ஒரு
மின் மோட்டார் பம்பு
செட்டுக்கு ரூ.10 ஆயிரம்
மானியம் வழங்கப்படவுள்ளது.
எனவே
இத்திட்டத்தில் பயன்பெற
விருப்பமுள்ள நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் உதவி
செயற்பொறியாளர் வேளாண்மைப் பொறியியல் துறை ஒருங்கிணைந்த வேளாண்மை விரிவாக்க மையம்
சாமந்தான் பேட்டை, தெற்கு
பால்பண்ணைச்சேரி, நாகப்பட்டினம் என்ற அலுவலகத்தை சிட்டா,
சிறு, குறு விவசாயி
சான்றிதழ், அடங்கல், கிணறு
அமைந்துள்ள நிலவரைபடம், மின்சார
இணைப்பு அட்டை விவரம்
மற்றும் வங்கி சேமிப்பு
கணக்கு புத்தகத்தின் முதல்
பக்க நகலுடன் இணைக்க
வேண்டும். முன்னுரிமை அடிப்படையில் பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow