TAMIL MIXER EDUCATION.ன்
ஆசிரியர் தேர்வு வாரிய செய்திகள்
TET –
ஆன்லைன் பயிற்சி தேர்வில்
புது மாற்றங்கள்
ஆசிரியர்
தகுதித் தேர்வில் (TET) கலந்துகொள்ளும் ஆசிரியர்களுக்கான ஆன்லைன்
பயிற்சி தேர்வில் கூடுதல்
வசதிகளை ஆசிரியர் தேர்வு
வாரியம் அறிவித்துள்ளது.
TET-1 மற்றும்
TET-2 தாள்களுக்கு மொத்தம் 4.5 லட்சம்
பேர் விண்ணப்பித்துள்ளனர். பல
தனியார் பயிற்சி மையங்கள்
மூலம் பயிற்சி பெற்றாலும், TNRB மூலம் விண்ணப்பதாரர்களுக்கு இணைய வழி
பயிற்சி தேர்வு நடத்தவுள்ளது.
TNRB மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில்:
ஆகஸ்ட்
7 முதல் தேர்வு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால்
நிர்வாக காரணங்களுக்காக தேர்வு
செப்டம்பர் 10ம் தேதிக்கு
ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இணைய
வழி பயிற்சி தேர்வு
30 நிமிடங்கள் நடைபெறும். 30 நிமிடங்களில் தேர்வர்கள் 30 கேள்விகளுக்கு பதிலளிக்க
வேண்டும். ஒரு கேள்விக்கு நான்கு ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டிருக்கும். அதில் ஒரு
பதிலை தேர்வர்கள் கிளிக்
செய்ய வேண்டும். கணினி
வழியில் தேர்வு நடைபெறும்.
அதேபோல்,
தேர்வர்கள் தங்கள் விருப்பம்
போல் எந்த கேள்விக்கும் செல்லலாம். திரையின் கீழ்
கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்
(கேள்வி எண்ணை) கிளிக்
செய்வதன் மூலம் அவர்கள்
எந்த கேள்விக்கும் சென்று
விடையளிக்கலாம்.
தேர்வு
முடிவதற்குள் தேர்வர்கள் எந்நேரமும் தங்கள் விடையை
மாற்றியமைத்துக் கொள்ளலாம்.
கேள்வியை தவிர்க்கவும் செய்யலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow