Blog latest news

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய அறிவிப்பு – EPFO இணையதளம் மூலம் தகவல்கள்

Provident2BFund2BPF Tamil Mixer Education

 

ஓய்வூதியதாரர்களுக்கான புதிய
அறிவிப்பு – EPFO இணையதளம் மூலம்
தகவல்கள்

நாடு
முழுவதும் உள்ள அரசு
அலுவலகங்களில் பணிபுரிவோருக்கு அவர்களது ஓய்வூதிய காலத்தில்
உதவியாக இருப்பதற்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஓவ்வொரு மாதமும் ஓய்வூதியம் பெற பயனர்கள் அலுவலகங்களை நேரடியாக அணுக வேண்டும்.
ஆனால் தற்போது கொரோனா
காலத்தில் வயதானவர்கள் நேரடியாக
வருவது சிரமமான ஒன்றாகும்.

இந்நிலையில் EPFO எனப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி
ஆணையம் ஒரு சிறப்பான
அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த
அறிவிப்பின் படி, ஓய்வூதியதாரர்கள் அவர்களுக்கு தேவையான
ஓய்வூதியம் குறித்த தகவல்களை
தெரிந்து கொள்ள PF அலுவலகத்திற்கு நேரடியாக செல்ல தேவையில்லை. EPFO இணையதளம் மூலமாக
தெரிந்து கொள்ளலாம் என
தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு
ஊழியர்கள் ஓய்வு பெற்றதும்
PPO
எண் மூலம் பென்சன்
பெறுவார்கள். PPO என்பது ஒரு
12
இலக்க எண் ஆகும்.
இந்த எண் மத்திய
பென்சன் அலுவலகத்துடன் தொடர்புகள் வைத்துக்கொள்ள பயன்படுகிறது. இந்த எண்ணை பயன்படுத்தி ஓய்வூதியதாரர்கள் ஒரு
வங்கியில் இருந்து மற்றொரு
வங்கிக்கு கணக்குகளை மாற்றி
கொள்ளலாம். இந்த எண்ணை
EPFO
மூலமாக எளிமையாக தெரிந்து
கொள்ளலாம். எனவே ஓய்வூதியதாரர்கள் தங்களுக்கு தேவையான
சாதாரண தகவல்கள் முதல்
முக்கிய தகவல்கள் வரை
இணையதளம் மூலமாகவே எளிதாக
தெரிந்து கொள்ளலாம்.

Avatar

admin

About Author

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *

× Xerox [1 page - 50p Only]