PF வாடிக்கையாளர்களுக்கு புதிய
அறிவிப்பு ஏப்ரல் 1 முதல்
அமல்
2021-2022ஆம்
ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்
பிப்ரவரி மாதம் 1 ஆம்
தேதி மத்திய நிதி
அமைச்சர் நிதி அமைச்சர்
நிர்மலா சீதாராமன் அறிவித்தார். அப்போது ஊழியர்களுக்கான PF அறிவிப்பில் சில மாற்றங்கள் வெளியிடப்பட்டது.
அதில்
ரூ.2.5 லட்சத்திற்கு அதிகமான
PF தொகை பங்களிப்புக்கு வழங்கப்படும் வட்டித் தொகைக்கு வரி
வசூலிக்கப்படும் என
தெரிவித்தார். இதனால்
அதிகமாக வருமானம் ஈட்டுவோர்
பாதிக்கப்படுவார்கள்.
எனவே
மத்திய அரசு இதில்
மாற்றம் அறிவிக்கப்பட உள்ளதாக
தெரிவித்தது. அதன்படி ஏற்கனவே
நிர்ணயிக்கப்பட்ட ரூ.2.5
லட்சம் வரம்பை ரூ.5
லட்சமாக மாற்றம் செய்யப்பட
உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த
சலுகை நிறுவனங்களின் பங்களிப்பு இல்லாத PF வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே
வழங்கப்படும். இந்த
புதிய விதிமுறை 2021ஆம்
ஆண்டு ஏப்ரல் மாதம்
1 ஆம் தேதி முதல்
அமல்படுத்தப்பட உள்ளது.
இந்த
புதிய PF விதிகள் மூலமாக
93 சதவிகித பயனாளர்கள் பயனடைவார்கள். அவர்கள் பெறும் வட்டி
வருவாய்க்கு முற்றிலும் வரி
விலக்கு கிடைக்கும்.
மேலும்
இந்த அறிவிப்பு மூலமாக
நடுத்தர மற்றும் ஏழை
எளிய மக்கள் பாதிக்கப்படாமல் அவர்களுக்கு இது மிகவும்
பயனுள்ளதாக இருக்கும் என
மத்திய நிதி அமைச்சர்
தெரிவித்துள்ளார்.