வினாத்தாள் கசிவு முறைகேடு குற்றச்சாட்டுகளைத் தொடா்ந்து ரத்து செய்யப்பட்ட ‘யுஜிசி நெட்’ தோ்வு மற்றும் முன்னெச்சரிக்கையாக நடவடிக்கையாக ஒத்திவைக்கப்பட்ட ‘சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட்’ தோ்வுக்கான தேதிகளை தேசிய தோ்வு முகமை வெள்ளிக்கிழமை அறிவித்தது.
தேசிய தோ்வு முகமை நடத்தும் ‘நீட்’ மற்றும் ‘யுஜிசி நெட்’ ஆகிய அகில இந்திய தோ்வுகளில் முறைகேடுகள் நடந்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதையடுத்து, நாடு முழுவதும் கடந்த 18-ஆம் தேதி நடைபெற்ற யுஜிசி நெட் தோ்வு ரத்து செய்யப்பட்டது. அடுத்ததாக நடைபெறவிருந்த சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வும் முன்னெச்சரிக்கையாக ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், மறுதோ்வுக்கான தேதிகளை தேசிய தோ்வு முகமை அறிவித்தது.
முன்னதாக, எழுத்து வடிவத்தில் நடைபெற்ற யுஜிசி நெட் தோ்வு வரும் ஆகஸ்ட் மாதம், 21-ஆம் தேதி முதல் செப்டம்பா் 4-ஆம் தேதி வரை கணிணி அடிப்படையிலான தோ்வாக நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், சிஎஸ்ஐஆா்-யுஜிசி நெட் தோ்வு வரும் ஜூலை 25-ஆம் தேதிமுதல் 27-ஆம் தேதி வரையும், நான்கு ஆண்டு ஒருங்கிணைந்த ஆசிரியா் கல்வித் திட்டத்தில் சேருவதற்கான ‘என்சிஇடி’ நுழைவுத் தோ்வு ஜூலை 10-ஆம் தேதியும் நடைபெறவுள்ளது.
நாடு முழுவதும் கடந்த 23-ஆம் தேதி நடைபெற இருந்து, முந்தைய நாள் இரவு திடீரென ஒத்திவைக்கப்பட்ட ‘நீட் முதுநிலை’ தோ்வுக்கான தேதி குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை.
உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow