இலவச கேஸ்
சிலிண்டர், அடுப்பு வேண்டுமா?
உஜ்வாலா
திட்டத்தின் கீழ் இலவச
எரிவாயு இணைப்பு, நிரப்பப்பட்ட சிலிண்டர் மற்றும் அடுப்பு
பெறுவது எப்படி என்று
தெரிந்து கொள்ளுங்கள்.
உஜ்வாலா
2.0 திட்டத்தின் கீழ் மகளிர்
இலவசமாக கேஸ் சிலிண்டர்
மற்றும் அடுப்பு பெறுவது
மிக மிக சுலபம்.
இத்திட்டத்தின் கீழ்
கிராமப்புறங்களில் உள்ள
ஏழைப் பெண்கள் சுகாதாரமான சமையல் எரிவாயு பெற்றுக்கொள்ளலாம்.
வறுமைக்
கோட்டுக்குக் கீழ்
உள்ள குடும்பங்களுக்கு இத்திட்டத்தின் கீழ் இலவச சிலிண்டர்
இணைப்பு வழங்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் அடுப்பு வாங்குவதற்கு வட்டியில்லாக் கடனும்
இலவச சிலிண்டரும் கிடைக்கும். அதற்கு என்ன செய்ய
வேண்டும் என்பதை விரிவாக
பார்க்கலாம்.
இலவச சிலிண்டர் இணைப்பு பெறுவதற்கு:
www.pmuy.gov.in என்ற
வெப்சைட்டில் விண்ணப்பிக்க வேண்டும். அந்த படிவத்தில் கேட்கப்படும் பெயர்,
முகவரி, ஜன் தன்
வங்கிக் கணக்கு விவரம்,
ஆதார் நம்பர் போன்ற
விவரங்களைப் பதிவிட வேண்டும்.
இதற்கு ஆதரமாக சில
ஆவணங்களையும் பதிவேற்ற
வேண்டும்.
அவை,
பிபிஎல் கார்டு, வங்கியில்
சேமிப்புக் கணக்கு, அடையாள
அட்டை (ஆதார் அட்டை
அல்லது வாக்காளர் அடையாள
அட்டை) மற்றும் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வறுமை
கோட்டிற்கு கீழ் உள்ளதற்கான ஆவணம்.
குடும்பத்தில் யாருக்கும் ஏற்கனவே எல்பிஜி
இணைப்பு இருக்கக்கூடாது என்பது
இந்த திட்டத்தின் நன்மையை
பெற விதிக்கப்பட்டுள்ள நிபந்தனை.
விண்ணப்பிக்கும் பெண்ணிற்கு 18 வயதுக்கு மேல் இருக்க
வேண்டும். அதே போல்,
விண்ணப்பதாரரின் எந்த
குடும்ப உறுப்பினரின் பெயரிலும்
எல்பிஜி இணைப்பு இருக்கக்கூடாது. இதன் பின்னர் தகுதியானவர்களுக்கு பொதுத் துறை
எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர்
இணைப்புகளை வழங்கும்.
இலவச
எரிவாயு இணைப்புகளை வழங்குவதோடு, நிரப்பப்பட்ட எரிவாயு
சிலிண்டர்கள் மற்றும்
அடுப்பு ஆகியவை கொடுக்கப்படுகின்றன. கிராமப்புற பெண்களுக்கு இந்த திட்டம் கட்டாயம்
கைக்கொடுக்கும். தேவை
உள்ளவர்கள் கட்டாயம் விண்ணப்பித்து பயன் பெறலாம்.