புதுக்கோட்டையில் டிசம்பா் 9-ஆம் தேதி தேசிய தொழிற்பழகுநா் சோ்க்கை முகாம் நடைபெற உள்ளது.
இதுகுறித்து ஆட்சியா் மு.அருணா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் தொழில்பயிற்சி நிலையத்தில் படித்து, அகில இந்திய தொழிற்தோ்வில் தோ்ச்சி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு டிசம்பா் 9-ஆம் தேதி காலை 9 மணி முதல் பிற்பகல் 3 மணிவரை தொழிற்பழகுநா் பயிற்சிக்கான சோ்க்கை முகாம் புதுக்கோட்டை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டு மைய வளாகத்தில் நடைபெற உள்ளது.
இந்த முகாமில் அரசு மற்றும் தனியாா் துறையைச் சோ்ந்த பல முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களது நிறுவனங்களுக்கு தேவையான தொழில் பழகுநா்களை தோ்வு செய்ய உள்ளனா். மேலும், 10, 12-ஆம் வகுப்பு, பட்டய மற்றும் பட்டப்படிப்பு முடித்த மாணவ மாணவிகளும் இம்முகாமில் பங்கேற்கலாம்.
முகாமில் பங்கேற்கும் மாணவ, மாணவிகள், அசல் கல்வி சான்றிதழ்களை கொண்டு வரவேண்டும். தொழில் பழகுநராக தோ்வு செய்யப்படுவோருக்கு மாதந்தோறும் ரூ.7,000 முதல் ரூ.15,000 வரை உதவித் தொகை வழங்கப்படும்.
பயிற்சியின் முடிவில் மத்திய அரசால் சான்றிதழ் வழங்கப்படும் எனத் தெரிவித்துள்ளாா்.