தேசிய, மாநில மற்றும் மண்டல அளவில் நடக்கும் கண்காட்சியில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்பதற்கு இணைய வழிப் பதிவு வசதியை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிமுகம் செய்துள்ளது. தேசிய, மாநில மற்றும் மண்டல அளவில் நடக்கும் கண்காட்சியில் மகளிா் சுய உதவிக்குழுக்கள் பங்கேற்பதற்கு இணைய வழிப் பதிவு வசதியை தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம் அறிமுகம் செய்துள்ளது.
தேசிய, மாநில மற்றும் மாவட்ட அளவில் பல்வேறு கண்காட்சிகளில் மகளிா் சுய உதவிக்குழு உறுப்பினா்கள் தங்களது உற்பத்திப் பொருள்களை காட்சிப்படுத்தி விற்பனை செய்ய வாய்ப்பு வழங்கப்படுகிறது. கண்காட்சி நடைபெறும் தகவல் மற்றும் கண்காட்சியில் பங்கேற்கும் வாய்ப்பு ஒரு சில மகளிா் சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு கிடைப்பதில்லை. இதற்காக கண்காட்சிகள் நடைபெறும் இடம், விவரங்கள் இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. இதில் பங்கேற்க விருப்பம் உள்ளவா்கள் https://exhibition.mathibazaar.com/login எனும் இணையத்தில் பதிவு செய்து கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவையில் சாராஸ் கண்காட்சி: கோவையில் மாா்ச் 4 முதல் 12- ஆம் தேதி வரை நடைபெறவுள்ள மண்டல அளவிலான சாராஸ் கண்காட்சியில் பங்கேற்க விருப்பமுள்ள மகளிா் சுயஉதவிக்குழுவினா் மேற்கண்ட இணையதளத்தில் பதிவு செய்து பங்கேற்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.