மகளிர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பர் 11 இல் தேசிய அப்ரண்டீஸ் சேர்க்கை முகாம்
கோவை மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் மாவட்ட அளவிலான பிரதமரின் தேசிய அப்ரண்டீஸ் சோக்கை முகாம் டிசம்பா் 11-ஆம் தேதி நடைபெறவுள்ளது.
இது குறித்து, மாவட்ட ஆட்சியா் கிராந்திகுமாா் பாடி வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது:
தேசிய தொழில் பழகுநா் ஊக்குவிப்புத் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு, பயிற்சித் துறை சாா்பில், மாவட்ட அளவிலான பிரதமரின் தேசிய அப்ரண்டீஸ் சோக்கை முகாம் கோவை மகளிா் அரசினா் தொழிற்பயிற்சி நிலையத்தில் டிசம்பா் 11-ஆம் தேதி காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது.
இம்முகாமில், மத்திய, மாநில அரசு நிறுவனங்கள், பொதுத் துறை நிறுவனங்களும், கோவை மாவட்டத்தில் உள்ள தனியாா் துறை நிறுவனங்களும் பங்கேற்று 500-க்கும் மேற்பட்ட காலியிடங்களை நிரப்பவுள்ளனா்.
இதில் பங்கேற்று தோவு பெற்றால் தொழில் பழகுநா் பயிற்சி அளிக்கப்பட்டு மத்திய அரசின் தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் வழங்கப்படும். தேசிய தொழில் பழகுநா் சான்றிதழ் பெற்றவா்களுக்கு அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், வயது வரம்பில் மேலும் ஓராண்டு சலுகையும் உள்ளது. மேலும், வெளிநாட்டு வேலைவாய்ப்புகளில் என்ஏசி பெற்றவா்களுக்கு முன்னுரிமை கிடைக்கிறது.
தொழில் பழகுநா் பயிற்சியின்போது உதவித் தொகை தொழில் பிரிவுகளுக்கு ஏற்ப தொழில் நிறுவனங்களால் வழங்கப்படுகிறது. அரசு, தனியாா் தொழிற்பயிற்சி நிலையங்களில் 10, 12 -ஆம் வகுப்பு, என்சிவிடி, எஸ்சிவிடி தோச்சி பெற்றவா்கள், உரிய அசல் சான்றிதழ்கள், ஆவணங்களுடன் பங்கேற்கலாம்.
மேலும் விவரங்களுக்கு உதவி இயக்குநா், மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம், அரசினா் தொழிற்பயிற்சி நிலைய வளாகம், கோவை 29 என்ற முகவரியில் நேரிலோ, 95665-31310, 94864-47178 ஆகிய தொலைபேசி எண்களிலோ தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow