நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு பயிற்சி
நாமக்கல்லில் வரும் 11ம்தேதி, நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி நடைபெறுகிறது.
இதுகுறித்து நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரியின், கோழிகளுக்கான மரபுசார் மூலிகை ஆராய்ச்சி மைய தலைவர் கோபால கிருஷ்ணமூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:
நாமக்கல் கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், கோழிகளுக்கான மரபுசார் மூலிகை மருத்து ஆராய்ச்சி மையத்தில், வரும் 11ம்தேதி காலை 11 மணிக்கு, நாட்டுக்கோழி வளர்ப்பில் மூலிகை மருத்துவத்தின் பயன்பாடு என்ற தலைப்பில், ஒருநாள் இலவச பயிற்சி வகுப்பு நடைபெறுகிறது.
இந்த பயிற்சி வகுப்பில் கோழிப்பண்ணையாளர்கள், கோழி வளர்ப்போர், விவசாயிகள், இளைஞர்கள் மற்றும் ஆர்வம் உள்ள அனைவரும் கலந்துகொள்ளலாம். பயிற்சி குறித்து மேலும் விபரங்களுக்கு 04286 233230 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow