HomeNewslatest newsகாளான் வளர்ப்பு பயிற்சி: சென்னை வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு
- Advertisment -

காளான் வளர்ப்பு பயிற்சி: சென்னை வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு

காளான் வளர்ப்பு பயிற்சி: சென்னை வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு
காளான் வளர்ப்பு பயிற்சி: சென்னை வேளாண் பல்கலைக்கழகம் அழைப்பு

கிண்​டி​யில் வரும் 9-ம் தேதி நடைபெற உள்ள காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி வகுப்​பில் ஆர்வம் உள்ளவர்கள் பங்கேற்க தமிழ்​நாடு வேளாண்மை பல்கலைக்​கழகம் அழைப்பு விடுத்​துள்ளது.

இதுகுறித்து பயிற்சி மையத்​தின் தலைவர் ஏ.டி.அசோக் வெளி​யிட்ட செய்திக்​குறிப்பில் கூறியிருப்பதாவது: சென்னை கிண்​டி​யில் செயல்​பட்டு வரும் தமிழ்​நாடு வேளாண்மை பல்கலைக்கழக தகவல், பயிற்சி மையத்​தில் ஜன.9-ம் தேதி காளான் வளர்ப்பு குறித்த பயிற்சி அளிக்​கப்​படு​கிறது.

இதில், காளான் குடில் அமைத்​தல், காளான் வித்து மற்றும் படுக்கை தயாரித்​தல், தொற்று நீக்கம் செய்​தல், காளான் அறுவடை மற்றும் உற்பத்தி செய்​வதற்கான வரவு செலவீனங்கள் ஆகியவை குறித்து தொழில்​நுட்ப வல்லுநர்கள் விளக்​கமளிக்​க​வுள்​ளனர்.

இதேபோல் ஜன.10-ம் தேதி நடைபெறும் பயிற்சி வகுப்​பில் முட்டை மற்றும் முட்​டை​யில்லாத பிரவுனிகள், மெல்​லும் பிரவுனிகள், வால்​நட், சாக்​லெட், வேர்க்​கடலை, நியூடெல்லா, தேங்​காய், கேரமல், ராஸ்​பெர்ரி போன்ற பல்வேறு வகையான பிரவுனிகள் செய்வதற்கு கற்றுத்​தரப்​படும்.

தொழில் முனை​வோர், விவசா​யிகள், மகளிர், இளைஞர்​கள், சுய உதவிக் குழு​வினர் என அனைத்து தரப்​பினரும் இதை பயன்​படுத்​திக் கொள்​ளலாம். இந்த பயிற்சியில் பங்கேற்க விருப்பம் உள்ளவர்கள் 04429530048 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு ​கொண்டு, ​முன்​ப​திவு செய்​யு​மாறு அறி​வுறுத்​தப்​படு​கிறது. இவ்​வாறு அ​தில் கூறப்​பட்​டுள்​ளது.

உங்களிடம் உள்ள PDF Files PRINT வேண்டுமென்றாலும் தொடர்பு கொள்ளவும் (Whatsapp): +91 80720 26676 – 1 Page (50 Paise Only)

எங்கள் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் குழுக்களில் சேரவும்

Bharani
Bharanihttp://www.tamilmixereducation.com
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -