TNPSC தலைவராக
முனியநாதன் நியமனம்
TNPSC
தலைவராக சி.முனியநாதன் (பொ) நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்று மனிதவள
மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
TNPSC
தலைவராக இருந்த பாலச்சந்திரன் கடந்த 9ஆம் தேதி
பணி ஓய்வு பெற்றார்.
இதையடுத்து, புதிய தலைவராக
சி.முனியநாதன் நியமனம
செய்யப்பட்டுள்ளார். புதிய
தலைவர் நியமிக்கப்படும் வரை
ஏற்கனவே டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக இருந்து வரும் சி.முனியநாதன் பொறுப்புத் தலைவராக செயல்படுவார் என்று மனிதவள மேலாண்மைத் துறை அறிவித்துள்ளது.
சென்னையைச் சேர்ந்தவர் சி.முனியநாதன். ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ்.
அதிகாரியான இவர் கடந்த
2021ஆம் ஆண்டு ஜூலையில்
டிஎன்பிஎஸ்சி உறுப்பினராக நியமிக்கப்பட்டார். நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர், ஆதிதிராவிட நலத் துறை ஆணையர்,
தொழிலாளர் நலத் துறை
ஆணையர் உள்ளிட்ட பல்வேறு
பொறுப்புகளை வகித்துள்ளார்.
பாலச்சந்திரன் பணி ஓய்வு பெற்ற
பின், ஏற்கனவே உறுப்பினராக இருந்து வரும் முனியநாதன் பொறுப்பு தலைவராக நியமனம்
செய்யப்பட்டுள்ளார்.