TAMIL MIXER
EDUCATION.ன்
பயிற்சி செய்திகள்
குடிமைப் பணிக்கான எழுத்துத் தேர்வுக்கு ஆளுமைத் தேர்வை எதிர்கொள்ள மாதிரி பயிற்சி
குடிமைப் பணித் தேர்வில் முக்கிய இடம் வகிக்கும் ஆளுமைத் தேர்வுக்கான மாதிரி பயிற்சியை அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் நடத்தவுள்ளது.
இதுகுறித்து மையத்தின் தலைவரும், தலைமைச் செயலாளருமான வெளியிட்ட செய்திக் குறிப்பு:
குடிமைப் பணிக்கான எழுத்துத் தேர்வுகளில் வெற்றி பெற்றவா்களுக்கு ஆளுமைத் தேர்வு நடத்தப்படும். இந்த ஆளுமைத் தேர்வை எதிர்கொள்ளவிருக்கும் தமிழக மாணவா்களுக்கு அகில இந்திய குடிமைப் பணிகள் தேர்வு பயிற்சி மையம் சார்பில் மாதிரி ஆளுமைத் தேர்வுகள் ஆண்டுதேர்றும் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டு, வரும் ஜனவரி 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் நடத்தப்படுகிறது. முதல் நாளில் ஆளுமைத் தேர்வு குறித்தும் அதில் தேவைப்படுகின்ற திறன்கள் பற்றியும் விளக்கப்படும்.
மாதிரித் தேர்வை ஆறு குழுக்கள் நடத்தவுள்ளன. தேர்வுக்கு வருவோருக்கு அண்ணா நிர்வாகப் பணியாளா் கல்லூரியில் மதிய உணவு அளிக்கப்படும். மேலும், ஊக்கத் தொகையாக ரூ.5 ஆயிரம் கொடுக்கப்படும். இதுதொடா்பான விவரங்களை இணையதளத்தில் காணலாம்.
முதன்மைத் தேர்வு வெற்றியாளா்கள் தங்களது புகைப்படத்துடன் கூடிய விண்ணப்பப் படிவத்தை பயிற்சி மைய தலைவருக்கு மின்னஞ்சலுக்கோ aicscc.gov@gmail.com அல்லது 163/1, காஞ்சி, பி.எஸ்.குமாரசாமி ராஜா சாலை, பசுமைவழிச் சாலை, ராஜா அண்ணாமலைபுரம், சென்னை – 600 028 என்ற முகவரிக்கோ அனுப்பி வைக்க வேண்டும்.