அலைபேசி பழுது நீக்குதல், சோலார் பேனல் நிறுவுவது குறித்து இலவச பயிற்சி – Mobile Repair, Solar Panel Training
மதுரை புதுார் தொழிற்பேட்டையில் உள்ளஎம்.எஸ்.எம்.இ., தொழில்நுட்ப மேம்பாட்டு விரிவாக்க மையம் சார்பில் அலைபேசி பழுதுநீக்குதல், சோலார் பேனல் நிறுவுவது குறித்த இலவச பயிற்சி நவம்பரில் துவங்குகிறது.8ம் வகுப்புக்கு மேல் படித்த 45 வயதுக்குட்பட்ட ஆண், பெண் பங்கேற்கலாம்.
பயிற்சி காலம் 40 நாட்கள். இரண்டு பயிற்சிகளும் தனித்தனியாக நடத்தப்படும். பாஸ்போர்ட் போட்டோ, ஆதார் அட்டை நகல், கல்வி சான்றிதழ் நகல், எஸ்.சி.,எஸ்.டி., பிரிவினர் ஜாதிச்சான்றிதழ் நகலுடன் அக்.,30க்குள் நேரில் முன்பதிவு செய்ய வேண்டும். அலைபேசி: 86670 65048
Follow @ Google: புதிய வேலைவாய்ப்பு செய்திகள் மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள் – Click Here to Follow