மா–வில்
பூச்சி தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்
மா–வில் பூச்சி
தாக்குதலை கட்டுப்படுத்தும் முறைகள்
குறித்து, பையூர் மண்டல
ஆராய்ச்சி நிறுவன தலைவர்
பரசுராமன் விளக்கம் அளித்துள்ளார்.
இது குறித்து, பையூர் மண்டல ஆராய்ச்சி நிறுவன தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி, காவேரிப்பட்டணம், பர்கூர், கிருஷ்ணகிரி, சூளகிரி
உள்ளிட்ட வட்டாரங்களில், மா
சாகுபடி செய்யப்படுகிறது. தற்போது
பூ பூத்து இருப்பதால் தத்துப்பூச்சிகள் மற்றும்
காவடி புழு, பூ
பிணைக்கு புழு தாக்குவதால், பூ உதிர்ந்து விடுகிறது.
இதனால், காய் பிடிப்பது
குறைந்துவிடும்.
பூ
பூக்கும் பருவத்தில் மேற்கூறிய
பூச்சிகளை கட்டுப்படுத்த, இமிடாகுளோப்ரிட், 0.5 மி.லி.,
ஒரு லிட்டர் நீருடன்
கலந்து தெளிக்க வேண்டும்.
அல்லது தையோமித்தாக்ஸம், 0.5 கிராம்
அளவு ஒரு லிட்டர்
நீருடன் கலந்து தெளிக்க
வேண்டும். இரண்டாவது தெளிப்பாக
ஏப்., மாதம், ஒரு
சில புழுக்களான இலை
பிணைப்பு புழு, மா
இலை புழு மற்றும்
காவடி புழுக்கள் பிங்சு
காய்களை தின்று சேதப்படுத்தும்.
இதை
அசாரக்டின் 1,500 பி.பி.எம்.,
4 மில்லி, ஒரு லிட்டர்
தண்ணீர் அல்லது டைமித்தோயேட், 2 மி.லி., ஒரு
லிட்டர் நீருடன் கலந்து
தெளிக்க வேண்டும். அல்லது
எமாமெக்டின்பென்சோயேட், 0.4 கிராம்
ஒரு லிட்டர் நீருடன்
கலந்து தெளிக்க வேண்டும்.
மூன்றாவது தெளிப்பாக, மே
மாதம் முதல் வாரத்தில்
பழ ஈக்கள் மா
பழங்களை தாக்கி, அதிக
சேதம் ஏற்படுத்தும். இந்த
பழ ஈக்கள் தாக்கினால், பழங்கள் விற்பனைக்கு உகந்ததாக
இருக்காது.
இதை
கட்டுப்படுத்த ஒரு
ஏக்கருக்கு, 8 பழ ஈ
பொறி (மித்தையல் யூஜினால்
பொறி) சம இடைவெளியில், மா மரத்தில் கட்டி
தொங்கவிட வேண்டும். மேற்கூறிய
பூச்சி கட்டுப்படுத்தும் முறைகளை,
பின்பற்றி மா சாகுபடி
செய்யும் விவசாயிகள், அதிக
மகசூல் பெறலாம்.
மேலும்,
விரிவான தகவலுக்கு பையூர்
மண்டல ஆராய்ச்சி நிலைய
உதவி பேராசிரியர் (பூச்சியியல்) கோவிந்தனை தொடர்பு கொள்ளலாம்.