HomeBlogமெடிக்கல் கூரியர் பிசினஸ் - மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம்
- Advertisment -

மெடிக்கல் கூரியர் பிசினஸ் – மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம்

மெடிக்கல் கூரியர் பிசினஸ் - மாதம் ரூ.1 லட்சம் வரை வருமானம்

சொந்தமாக தொழில் துவங்க வேண்டும் என்று பலரும் விரும்புகிறார்கள். ஆனால் எந்த துறையில் நுழைவது எவ்வளவு முதலீடு செய்வது என்பன உள்ளிட்ட பல அடிப்படை கேள்விகளுக்கு சரியான விடை தெரியாமல் தடுமாறுகிறார்கள்.

நீங்களும் இவர்களில் ஒருவர் என்றால் ரூ.7 லட்சம் முதலீட்டில் மாதந்தோறும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை வருமானம் கிடைக்க கூடிய தொழில் ஒன்றை பற்றி இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் சொந்தமாக தொழில் செய்ய விரும்பினால் மருத்துவப் பொருட்களை (Medical Supplies) டெலிவரி செய்யும் மெடிக்கல் கூரியர் சர்விஸஸ் (medical courier services) தொழில் பற்றி கருத்தில் கொள்ளலாம். மெடிக்கல் டெலிவரி மற்றும் பிக்-அப் சர்விஸ்களை வழங்குவது சுயதொழில் செய்ய விரும்புபவர்கள் அல்லது வணிக உலகில் நுழைய காத்திருப்பவர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பாக இருக்கலாம்.

தொழில் துவங்கி சாதிக்க வேண்டும் என்ற லட்சியம் கொண்ட தொழில்முனைவோருக்கு மெடிக்கல் கூரியர் பிசினஸ் என்பது குறைந்த விலை செயல்திறன் மற்றும் பல ரெவின்யூ சோர்ஸ்களை (வருவாய் ஆதாரங்கள்) தருவதால் சிறந்த ஆப்ஷனாக இருக்க கூடும். மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்ஸ்களில் மட்டுமே மருந்துகள் (medications) பயன்படுத்தப்படுவது இல்லை. மாறாக ஒவ்வொரு நாளும் மில்லியன் கணக்கான ஆர்டர்கள் supplies-ற்காக அல்லது மற்றும் தனிநபர்கள் குறிப்பிட்ட மருந்துகளுக்காக ஆன்லைனில் ஆர்டர் செய்கிறார்கள். எனவே, மெடிக்கல் கூரியர் சர்விஸ் என்று வரும் போது இதில் ஈடுபட ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு வைட்-ஓபன் மார்க்கெட் இருக்கிறது.

சந்தை வாய்ப்புகள்:

  • பிற பொருட்களை விட மருத்துவ தயாரிப்பு பொருட்களை கூடுதல் பாதுகாப்பாக மற்றும் முறையாக கையாண்டு அதனை டெலிவரி செய்ய தங்களால் முடியும் என்பதை உறுதிப்படுத்த, மெடிக்கல் கூரியர் வணிகத்தில் ஈடுபட நினைக்கும் நிறுவனங்களுக்கு குறிப்பிட்ட பயிற்சி மற்றும் சான்றிதழ்கள் தேவைப்படலாம். கடந்த 2021-ஆம் ஆண்டில் medical supplies-களை விநியோகிப்பதற்கான உலகளாவிய சந்தையின் மதிப்பு 50.33 அமெரிக்கா டாலர் பில்லியனாக இருந்ததாக Precedence Research மதிப்பிட்டுள்ளது. மேலும் இந்த சந்தை மதிப்பு வரும் 2030-ஆம் ஆண்டில் 97.5 அமெரிக்க டாலர் பில்லியனை எட்ட கூடும் அல்லது இதனை தாண்ட கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது.

மெடிக்கல் கூரியர் பிஸினஸிற்கு தேவையான முதலீடு:

  • ரூ.3,32,420 முதல் ரூ.8,31,050 வரையிலான முதலீட்டில் ஒரு மெடிக்கல் கூரியர் நிறுவனத்தை தொடங்கலாம். மேற்கண்ட முதலீடானது சாஃப்ட்வேர் ,வெப்சைட், ப்ரமோஷன் மற்றும் சரியான சான்றிதழ் (appropriate certification) உள்ளிட்டவற்றுக்கான கட்டணம் அடங்கும். உங்களிடம் சொந்தமாக கார் அல்லது வேறு 4 சக்கர வாகனம் இருந்தால் அதனைப் பயன்படுத்தி செலவுகளை குறைத்து கொள்வது மெடிக்கல் கூரியர் பிசினஸில் பெரிதும் உதவும்.

லாபம் :

  • மெடிக்கல் கூரியர் சர்விஸில் பொதுவாக ஒரு மணி நேரத்திற்கு சுமார் ரூ.2900 செலவாகும். டெலிவரிக்கு உங்கள் சொந்த வாகனத்தை பயன்படுத்தினால், அடிப்படை செலவுகளில் சான்றிதழ் வாங்குவது, இணையதளம் உருவாக்குதல் மற்றும் மார்கெட்டிங் கட்டணங்கள் ஆகியவை அடங்கும். இதில் உங்களுக்கு சுமார் 85 சதவீதம் வரை லாபம் கிடைக்கக்கூடும். நாளொன்றுக்கு சுமார் 8 மணிநேரம் வாரத்தில் 5 நாட்கள் டெலிவரி செய்வதன் மூலம் பிசினஸை துவங்கிய முதல் அல்லது இரண்டு வருடங்களில் ரூ.60,66,665 வரை சம்பாதிக்கலாம். லாப வரம்பு 85 சதவீதமாக இருந்தால், உங்கள் லாபம் ரூ.51,52,510 ஆக இருக்கும்.
Bharani
Bharani
Hello, I'm the voice behind Tamil Mixer Education, your go-to source for educational content. With a passion for sharing knowledge, I've been dedicated to providing job updates and study notes for the past 5 years. Explore my website for valuable resources. Connect with me on Instagram to stay updated and inspired. Let's embark on a journey of learning together

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -