வீட்டிலிருந்தபடியே MCA.,
MBA., படிப்பு – அண்ணா
பல்கலைக்கழகம்
பொறியியல்,
MCA., MBA
போன்ற படிப்புகளுக்கு சிறந்த
இடமாக திகழ்வது சென்னை
அண்ணா பல்கலைக்கழகம். இந்த
பல்கலைக்கழகத்தின் கீழ்
பல பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. பொறியியலில் பட்டப்படிப்பு படிக்க
விரும்பும் பெரும்பாலான மாணவர்களுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தில் படிக்க
வேண்டும் என்பது கனவாக
இருக்கிறது.
MCA.,
MBA பொறியியல் போன்ற
படிப்புகளுக்கு உகந்த
இடமாக காணப்படும் அண்ணா
பல்கலைக்கழத்தில் படிக்க
விரும்பும் அனைத்து மாணவர்களுக்கும் அப்பல்கலைக்கழகம் ஒரு
சிறந்த வாய்ப்பை வழங்கியுள்ளது.
அதன்படி
MCA., MBA கணிப்பொறி
அறிவியல் படிப்புகளில் இந்த
ஆண்டு மாணவர் சேர்க்கைக்கான அறிவிப்புகள் வெளிவந்துள்ளது. அதனால் பட்டப்படிப்பு முடித்து
MCA., MBA
படிக்க விரும்பும் மாணவர்களுக்கு எளிய வழியில் தொலைநிலைக்கல்வி மூலம் படிப்புகளை வழங்க
உள்ளது அண்ணா பல்கலைக்கழகம்.