MBA., MCA.,
MSC., தொலைதூர பட்டப்படிப்பு விண்ணப்பம் – அண்ணா பல்கலைக்கழகம்
அண்ணா
பல்கலைக்கழகம் தமிழகத்தின் முன்னணி பொறியியல் பல்கலைக்கழகம் ஆகும். நேரடி முறை
மட்டுமல்லாது, தொலைதூரக்
கல்வி முறையிலும் அண்ணா
பல்கலைக்கழகம் படிப்புகளை வழங்குகிறது. MBA., MCA.,
MSC., (Computer
Science).,
படிப்புகள் தொலைதூரக் கல்வியில்
வழங்கப்படுகின்றது.
பொது
மேலாண்மை, தொழில்நுட்ப மேலாண்மை,
விற்பனை மேலாண்மை, மனிதவள
மேலாண்மை, நிதி சேவை
மேலாண்மை போன்ற 8 பாடங்களுக்கு வழங்கப்படும் எம்பிஏ
படிப்புக்கு மாணவர் சேர்கைக்கு ஒரு பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும். மேலும், TANCET அல்லது தொலைதூரக்கல்வி நுழைவுத்
தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். எம்சிஏ பிரிவுக்கு பிசிஏ பட்டதாரிகள, கம்ப்யூட்டர் சயின்ஸ் இன்ஜினீரிங் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம். எம்எஸ்சி
படிப்பிற்கு 12ம் வகுப்பு
அல்லது பட்டப்படிப்பில் கணிதத்தை
ஒரு பாடமாக படித்திருக்க வேண்டும்.
எம்பிஏ
மற்றும் எம்சிஏ படிப்புகளுக்கு மாணவர்கள் வரும் ஏப்ரல்
15ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இந்த படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வு ஏப்ரல்
18ம் தேதி அன்று
காலை 10 மணிக்கு நடைபெறும்.
எம்எஸ்சி படிப்புக்கு வரும்
ஏப்ரல் 21ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
கலந்தாய்வு வரும் ஏப்ரல்
24ம் தேதி அன்று
நடைபெறும். மாணவர்கள் இந்த
படிப்புகளுக்கு http://cde.annauniv.edu என்ற
அதிகாரபூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.