SBI வாடிக்கையாளர்க KYC அப்டேட்
செய்ய மே 31 கடைசி
தேதி
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான SBI வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை
வெளியிட்டுள்ளது. அதாவது
KYC அப்டேட் வீட்டிலிருந்தே தபால்
மூலமாகவோ அல்லது ஈமெயில்
மூலமாகவோ அனுப்பும் வசதியை
அறிமுகப்படுத்தியுள்ளது. கொரோனா
2வது அலை மிக
வேகமாக பரவி வரும்
இச்சூழலில் வங்கி கிளைக்கு
சென்று KYC அப்டேட் செய்ய
முடியாது என்பதால் இந்த
வசதியை தற்போது SBI அறிவித்துள்ளது.
எனவே
KYC அப்டேட் செய்ய வேண்டியவர்கள் வீட்டிலிருந்தே தங்களது
அப்டேட் செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளது.
இது
குறித்து SBI தனது ட்விட்டர் பக்கத்தில்:
நாடு
முழுவதும் கொரோனா தீவிரமாக
இருப்பதாலும் பல்வேறு
மாநிலங்களில் ஊரடங்கு
அமலில் இருப்பதாலும் KYC அப்டேட்
செய்ய தேவையான ஆவணங்களை
தபால் மூலமாவோ அல்லது
ஈமெயில் மூலமாகவோ அனுப்பலாம் என்று தெரிவித்துள்ளது. மே
31 வரை மட்டுமே இதற்கான
கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.