மே 24 – டேனியல் கேப்ரியல் பாரன்ஹுட் பிறந்த தினம்
மே 24 – அலெக்சாண்ட்ரினா விக்டோரியா பிறந்த தினம்
மே 24 – நிக்கோலாஸ் கோப்பர்னிக்கஸ் நினைவு தினம்
உலகளவில் அதிக வருவாய் ஈட்டும் விளையாட்டு வீராங்கனையாக ஜப்பான் டென்னிஸ் வீராங்கனை நவோமி ஒசாகா முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
கரோனா தொற்று கட்டுப்பாட்டு மண்டலங்களில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள் , கரோனா அல்லாத மருத்துவமனைகளில் பணிபுரியும் சுகாதாரப் பணியாளர்கள், துப்புரவு பணியாளர்கள், காவலர்களுக்கு ஹைட்ராக்ஸி குளோரோகுயினை பயன்படுத்த ஐ.சி.எம்.ஆர் அனுமதி அளித்து உள்ளது.
கரோனா அச்சுறுத்தல் காரணமாக சர்வதேச கிரிக்கெட் மீண்டும் தொடங்கும்போது பின்பற்றப்பட வேண்டிய வழிமுறைகளை வெளியிட்டுள்ளது சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி).
பொதுமுடக்கம் காரணமாக மன்னர் பெரும்பிடுகு முத்தரையரின் 1,345ஆவது பிறந்தநாள் விழா திருச்சியில் சனிக்கிழமை எளிமையாகக் கொண்டாடப்பட்டது.
ஜேஇஇ, நீட் பயிற்சிக்கான செயலியை அறிமுகம் செய்த 72 மணி நேரத்தில் 2 லட்சம் பேர் பதிவிறக்கம் செய்துள்ளதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் ரமேஷ் போக்ரியால் நிஷாங்க் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
தமிழக காவல்துறையின் அவசர அழைப்பு எண் தற்காலிகமாக 100 மற்றும் 112 மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
வகங்கை மாவட்டம், திருப்புவனம் அருகேயுள்ள கீழடி, கொந்தகையை தொடர்ந்து, மணலூரில் சனிக்கிழமை அகழாய்வுப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
உலகிலேயே முதன்முறையாக குற்றவாளிகளுக்கு ஜூம் செயலி மூலம் தூக்கு தண்டனை அளித்த நாடு – சிங்கப்பூர்
இராஜீவ் காந்தி கிசான் நியாய யோஜனாவை சத்தீஸ்கர் மாநிலத்தில் தொடங்கப்பட்டது
உலக வங்கியின் தலைமை பொருளாதார நிபுணர் மற்றும் புதிய துணைத்தலைவராக கார்மண் ரெயன் ஹார்ட் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்