தனியாக காரில்
சென்றாலும் Mask கட்டாயம் – உயர்
நீதிமன்றம்
கடந்த
ஆண்டு கட்டுக்குள் வந்த
கொரோனா தற்போது நாட்டில்
கடந்த ஆண்டை விட
மிக வேகமாக பரவி
வருகிறது. நேற்று ஒரே
நாளில் நாட்டில் நோய்
பாதிப்பின் எண்ணிக்கை சுமார்
ஒரு லட்சத்தை தாண்டியுள்ளது. தற்போது இதனை முன்னிட்டு நாட்டின் பிரதமர் நரேந்திர
மோடி நாளை மாநில/யூனியன்
பிரதேச முதல்வர்களுடன் ஆலோசனை
நடத்தவுள்ளார். இதில்
கட்டுப்பாட்டு விதிமுறைகள், தடுப்பு நடவடிக்கைகள் ஆகியவற்றை
குறித்து ஆலோசிக்கவுள்ளதாக தெரிகிறது.
அதுமட்டுமல்லாமல் மக்கள் அனைவரையும் சமூக இடைவெளி மற்றும்
Mask அணிதல் போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றுமாறு சுகாதாரத்துறையினர் தொடர்ந்து
அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் ஒருவர் மனு
ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியதாவது, காரில்
தனியாக செல்லும் பொழுது
மாஸ்க் அணியாத காரணத்தினால் போக்குவரத்துத் துறையினர்
ரூ.500 அபராதம் விதித்துள்ளனர். ஆனால் காரில் தனியாக
சென்றால் மாஸ்க் அணிய
தேவையில்லை என்று மத்திய
சுகாதாரத்துறை அமைச்சகம்
தெரிவித்தது.
இதனை
அந்த மனுவில் சுட்டிக்காட்டினார் வழக்கறிஞர். தற்போது
இந்த வழக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. இதுகுறித்து கூறிய நீதிபதி, காரில்
தனியாக சென்றாலும் மாஸ்க்
அணிவது கட்டாயம். கொரோனாவிற்கு எதிரான பாதுகாப்பு ஆயுதம்
தான் மாஸ்க். சிக்னலில்
இருக்கும் பொழுது காரின்
கண்ணாடியை சிலர் இறக்கி
வைப்பர். இதனால் கொரோனா
பரவக்கூடும். மேலும் தடுப்பூசி
செலுத்திருந்தாலும் மாஸ்க்
கட்டாயம். இதற்கு ஆட்சேபம்
தெரிவிப்பதற்கு ஒன்றும்
இல்லை என்று நீதிமன்றம் தெரிவித்தது.