அடல் பென்ஷன்
திட்டம்
மூலம் திருமணமான தம்பதியர்
ரூ.10,000 பெறலாம்
எதிர்காலத்திற்கு தேவையான பண
பாதுகாப்பை உறுதி செய்து
வைக்க மக்கள் மிகுந்த
ஆர்வத்துடன் முயற்சிக்கின்றனர். அந்த
வகையில் ஓய்வூதிய திட்டம்
என்பது அவர்களது வாழ்வில்
இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது.
தனிநபர்கள் பயன்படுத்திக் கொள்ள
ஏராளமான திட்டங்களும், பாலிசிகளும் உள்ளன என்றாலும்கூட, தம்பதியர்கள் விரும்பும் பட்சத்தில் அவர்கள்
ஒன்றாகவே இணைந்து ஓய்வூதியத் திட்டங்களில் சேர்ந்து
கொள்வதற்கான வழிமுறைகள் உள்ளன.
இதுபோன்று
தம்பதிகளுக்கான திட்டங்களில் ஒன்றுதான் அடல் பென்ஷன்
யோஜனா. முதலீடுகளுக்கு தகுந்த
பாதுகாப்புடன் இந்த
திட்டத்தில் நல்ல பலன்கள்
கிடைக்கின்றன. இந்தத்
திட்டத்தின் கீழ் 2 தனி
அக்கவுண்ட்களை திறப்பதன்
மூலமாக கணவன், மனைவி
ஆகியோர் மாதந்தோறும் ரூ.10,000
ஓய்வூதியம் பெற முடியும்.
இந்த
திட்டத்தின் மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், வரி
செலுத்தும் தம்பதியரும் கூட
இதில் சேர்ந்து, திட்ட
காலத்தில் செலுத்தும் முதலீடுகளுக்கு வரிச் சலுகைகளைப் பெற
முடியும்.
அமைப்புசாரா துறைகளில் பணிபுரியும் தம்பதியர்களின் எதிர்கால பாதுகாப்பு கருதி,
இந்த திட்டம் கடந்த
2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. எனினும், தற்போது 18 வயது
முதல் 40 வயது வரை
உள்ள எந்த ஒரு
இந்திய குடிமகனும் இந்த
திட்டத்தில் பணத்தை முதலீடு
செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
ஒரு
நபருக்கு வங்கி அல்லது
அஞ்சல் அலுவலகத்தில் அக்கவுண்ட் இருந்தால், அவர்கள் அடல்
பென்சன் திட்டத்தில் எளிதாக
இணைந்து கொள்ளலாம் .முதலீட்டாளருக்கு 60 வயது நிரம்பிய
பிறகு அவர் ஓய்வூதியம் பெறுவதற்கான தகுதியை அடைவார்.
இந்த திட்டத்தில் முதலீடு
செய்ய ஆதார் எண்
மற்றும் மொபைல் எண்
ஆகியவை கட்டாயமாகும்.
அடல் பென்ஷன் திட்டத்தின் பலன்கள்:
திட்டத்தில் ஒரு நபர் செய்யும்
முதலீடுகளுக்கு ஏற்ப
அவருக்கு மாதந்தோறும் ரூ.1,000
அல்லது ரூ.2,000 அல்லது
ரூ.3,000 அல்லது ரூ.4,000
அல்லது அதிகபட்சமாக ரூ.5,000
மாதந்தோறும் ஓய்வூதியமாக 60 வயது
முதல் கிடைக்கும். ஒரு
நபருக்கு மாதந்தோறும் ரூ.5,000
ஓய்வூதியம் கிடைக்க வேண்டுமென்றால், அவர் தனது 18 வயது
முதல் ஒவ்வொரு மாதமும்
ரூ.210 முதலீடாக செலுத்த
வேண்டும்.
இதைப்
பெறுவதற்கு 30 வயதுக்கும் குறைவான
தம்பதியர்கள் இரண்டு
அட்டல் திட்ட அக்கவுண்ட்களை தொடங்கலாம். இந்த அக்கவுண்ட்களில் மாதம்தோறும் அவர்கள் தலா
ரூ.577 செலுத்துவதன் மூலமாக
60 வயது நிறைவடைந்த பிறகு
மாதம்தோறும் ரூ.10,000 ஓய்வூதியம் பெற முடியும்.
வரி சலுகை:
அடல்
ஓய்வூதிய திட்டத்தில் முதலீட்டாளர்கள் மேற்கொள்ளும் முதலீடு
என்பது அவர்கள் வரிச்சலுகை பெற உதவிகரமாக அமையும்.
வருமான வரிச் சட்டம்
80சி பிரிவின் படி
அதிகபட்சமாக ரூ 1.5 லட்சம்
வரையிலும் வரிச் சலுகைகளை
பெற முடியும்.