ONLINE மூலம் தொலைந்த DRIVING LICENSE திரும்ப பெறுவது எப்படி:
மோட்டார் வாகன லைசென்ஸ் மற்றும் ஆர்.சி. புத்தகம் உள்ளிட்டவை தொலைந்து போனால், போலீஸ் ஸ்டேஷனுக்கும் ஆர்.டி.ஓ., அலுவலகத் துக்கும், அலைய வேண்டிய அவசியமில்லை.
இ – சேவை வாயிலாக பெற்றுக் கொள்ளலாம். இது குறித்து, தமிழ்நாடு போக்குவரத்துத்துறை அலுவலகங்கள் (ஆர்.டி.ஓ.) வெளியிட்டுள்ள அறிவிப்பு:
பதிவுச்சான்று (ஆர்.சி.,) ஓட்டுனர் உரிமம், (லைசென்ஸ்) அனுமதிச்சீட்டு(பர்மிட்) பாஸ்போர்ட், பள்ளி மற்றும் கல்லுாரி சான்றிதழ், அடையாள அட்டை ஆகியவை தொலைந்து விட்டால், e.services.tnpolice.gov.in என்ற இணையத்தில் புகார் செய்து, lost document report பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
இதை, e.services.tnpolice.gov.in என்ற இணைய தள முகவரியில், உள்ளீடு செய்து தொடர்ந்து கேட்கும் கேள்விகளுக்கு பதிலளித்தால், தொலைந்த ஆவணங்களை எளிதாக பெறலாம். இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.