HomeBlogஎந்தவொரு தளத்திலும் கைரேகை மூலமாகவே லாகின் செய்யலாம் - Google Passkey
- Advertisment -

எந்தவொரு தளத்திலும் கைரேகை மூலமாகவே லாகின் செய்யலாம் – Google Passkey

Login to any site with fingerprint - Google Passkey

TAMIL MIXER
EDUCATION.
ன்
Google செய்திகள்

எந்தவொரு தளத்திலும் கைரேகை மூலமாகவே லாகின் செய்யலாம் – Google Passkey

கூகுள் நிறுவனம் Passkey என்ற அம்சத்தை கொண்டு வருவதற்கு சோதனை செய்து வருகிறது. இதன் மூலம் எந்தவொரு கம்பயூட்டர், ஸ்மார்ட்போன்களிலும்,
எந்தவொரு
தளத்திலும்
கைரேகை
மூலமாகவே
லாகின்
செய்யலாம்.

இணைய உலகில் பயனருக்கு ஏற்ற பல்வேறு அம்சங்களை வழங்குவதில் முன்னனி இடத்தில் கூகுள் நிறுவனம் செயல்படுகிறது.
அதற்கு
ஏற்றாற்போல்,
கூகுள்
மெயில்,
கூகுள்
குரோம்,
கூகுள்
மேப்ஸ்
என
பல
தயாரிப்புகளை
நாளுக்கு
நாள்
மேம்படுத்தி
வருகிறது.

அந்த வகையில், தற்போது Google Passkey என்ற ஒரு அம்சத்தை லாகின் வசதிக்காக கொண்டு வர உள்ளது. அதாவது ஜிமெயில், அமேசான் பிரைம், ஹாட்ஸ்டார், ஃபேஸ்புக் என எந்த ஒரு இணையதளமாக இருந்தாலும் அதில் நம்முடைய கணக்கிற்கான பயனர் பெயர், கடவுச்சொற்கள்
ஆகியவை
உள்ளிட
வேண்டும்.
இனி
அவ்வாறு
தனித்தனியாக
ஒவ்வொரு
முறையும்
பயனர்
பெயர்,
பாஸ்வேர்டு
விவரங்களை
எண்டர்
செய்யத்
தேவையில்லை.

நம்முடைய ஸ்மார்ட்போனில்
Passkey
என்ற
சிறிய
ஆப்
இன்ஸ்டால்
செய்தால்
போதும்.
ஒவ்வொரு
முறை
நாம்
மற்ற
கணினி,
ஸ்மார்ட்போன்களில்
கணக்கில்
லாகின்
செய்யும்
போது
போது,
நம்முடைய
ஸ்மார்ட்போனில்
விரல்ரேகை
வைக்கும்படி
திரையில்
தோன்றும்.
விரல்ரேகை
சென்சாரில்
விரலை
வைத்தவுடன்,
எளிமையாக
லாகின்
ஆகிவிடும்.

இந்த அம்சம் சோதனை முயற்சியில் உள்ளது. இது எந்தளவு பயனுள்ளது, பாதுகாப்பானது
என்பது
குறித்து
பல்வேறு
விமர்சனங்கள்
எழுந்துள்ளன.
ஒரே
விரல்ரேகை
மூலம்,
ஒருவரது
மொத்த
தனிப்பட்ட
விவரங்கள்,
லாகின்
ஐடிகளை
பெற்றுவிட
முடியும்
என்பதால்
தீவிர
ஆலோசனைக்குப்
பிறகே
இந்த
Passkey
அம்சம்
பயன்பாட்டுக்கு
வரும்.
ஏற்கெனவே
Yubikey, Google Authenticator
உள்ளிட்ட
பாதுகாப்பு
செயலிகள்
புழக்கத்தில்
இருப்பது
குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -