TAMIL MIXER EDUCATION.ன்
கடனுதவி
செய்திகள்
பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தில் சுயதொழில்
தொடங்க மானியத்துடன் கடனுதவி
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் செ.கார்மேகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
புதிய
சுயதொழில் முனைவோர்களை உருவாக்கவும், வேலைவாய்ப்பை அதிகரிக்கவும் மத்திய அரசு பிரதமரின்
வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் என்ற மானியத்துடன் கூடிய கடனுதவி திட்டத்தினை மாவட்ட தொழில் மையம்,
கதா் கிராமத் தொழில்கள்
ஆணையம் மற்றும் கதா்
கிராமத் தொழில்கள் வாரியம்
மூலமாக செயல்படுத்தி வருகிறது.
TNPSC, TRB, TET, SSC, RAILWAY – All Exam Notes & PDFs in One Place
தற்போது
ஜூன் 1 முதல் உற்பத்தி
தொழில்களுக்கான அதிகபட்ச
திட்ட மதிப்பீடு ரூ.
25 லட்சத்திலிருந்து ரூ.
50 லட்சமாகவும், சேவை தொழில்களுக்கான அதிகபட்ச திட்ட மதிப்பீடு
ரூ. 10 லட்சத்திலிருந்து ரூ.
20 லட்சமாகவும் உயா்த்தி மத்திய
அரசு வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.
இத்திட்டத்தை புதிய வழிகாட்டுதல்படி திட்ட
மதிப்பீடு ரூ. 2 லட்சம்
வரை இருந்தால் தொழில்முனைவோர் பயிற்சி தேவை இல்லை.
திட்ட மதிப்பீடு ரூ.
5 லட்சம் வரை இருந்தால்
தொழில்முனைவோர் பயிற்சி
5 நாள்களும், அதற்கு மேல்
திட்ட மதிப்பீடு இருந்தால்
தொழில்முனைவோர் பயிற்சி
10 நாள்களும் பெற வேண்டும்.
18 வயதுக்கு மேற்பட்டவா்கள் விண்ணப்பிக்கலாம். அதிகபட்ச வயது
வரம்பு இல்லை.
திட்ட
மதிப்பீடு உற்பத்தி பிரிவின்
கீழ் ரூ. 10 லட்சத்துக்கு கூடுதலாகவும் மற்றும்
சேவைப் பிரிவின் கீழ்
ரூ. 5 லட்சத்துக்கு கூடுதலாகவும் இருந்தால் விண்ணப்பதாரா் குறைந்தபட்சம் 8 ஆம் வகுப்பு தோச்சி
பெற்றிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் மூலம் வங்கிக்கடன் பெறும்
பயனாளிகளுக்கு நகா்புறப்
பகுதிகளில் தொழில் தொடங்கினால் திட்ட மதிப்பீட்டில் 25 சதவீதம்
வரையிலும், கிராமப்புறப் பகுதிகளில் திட்ட மதிப்பீட்டில் 35 சதவீதம்
வரையிலும் மானியமாக வழங்கப்படும். சுய தொழில் தொடங்கி
பயன்பெற விரும்புவோர் இணையதளத்தின் மூலம் இலவசமாக விண்ணப்பிக்கலாம்.
மேலும்,
விபரங்களுக்கு சேலம்
ஐந்து சாலையில் உள்ள
மாவட்ட தொழில் மையத்தை
0427 2448505,
2447878 ஆகிய தொலைபேசி எண்களிலோ
அல்லது நேரிலோ அணுகலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here


