TAMIL
MIXER EDUCATION.ன்
மயிலாடுதுறை
செய்திகள்
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார
மேம்பாடு அடைய கடனுதவி – மயிலாடுதுறை
இதுகுறித்து, மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு
பிற்படுத்தப்பட்டோர் பொருளாதார
மேம்பாட்டுக் கழகம்
மூலம் வழங்கப்படும் இக்கடன்
திட்டத்தில் ஆண்டு வருமானம்
ரூ.3 லட்சத்துக்கு மிகாத,
18 வயது பூா்த்தியடைந்த 60 வயது
மேற்படாத நபா் குடும்பத்தில் ஒருவா் மட்டும் விண்ணப்பித்து பயனடையலாம்.
பொதுகால
கடன் திட்டம் மற்றும்
தனிநபா் கடன் திட்டம்
மூலம் அதிகபட்சமாக ரூ.
15 லட்சம் வரை கடனுதவி
வழங்கப்படுகிறது. இதற்கு
ஆண்டு வட்டி 6 முதல்
8 சதவீதம் வரை வசூலிக்கப்படுகிறது. பெண்களுக்கான புதிய
பொற்கால கடன் திட்டத்தின்கீழ் 5% வட்டியில் அதிகபட்சமாக ரூ.
2 லட்சம் வரை கடனுதவி
வழங்கப்படுகிறது.
சிறுகடன்
வழங்கும் திட்டத்தின்கீழ் சுய
உதவிக்குழு மகளிர் உறுப்பினா் ஒருவருக்கு அதிகபட்சமாக ரூ.1
லட்சம் வரையும், குழு
ஒன்றுக்கு அதிகபட்சமாக ரூ.15
லட்சம் வரையும் 4% வட்டியில்
கடன் வழங்கப்படுகிறது. இதேபோல்,
ஆண் உறுப்பினா்களுக்கு 5 % வட்டியில்
கடன் வழங்கப்படுகிறது.
ஒரு
பயனாளிக்கு ரூ.30,000 வீதம்
2 கறவை மாடுகள் வாங்க
ரூ. 60,000 வரை
6% வட்டியில் கடனுதவி வழங்கப்படுகிறது. இதற்கான கடன் விண்ணப்பத்தை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும்
சிறுபான்மையினா் நல
அலுவலகம் மற்றும் அனைத்து
கூட்டுறவு வங்கி கிளைகளிலும் பெற்று, விண்ணப்பித்து பயன்பெறலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here