கால்நடை மேலாண்மை
– விவசாயிகளுக்கு பயிற்சி
தர்மபுரி
மாவட்டத்தில், கால்நடை
வளர்ப்பு நிலையான வருமானம்
தரும் தொழிலாக இருந்து
வருகிறது. இதில், விவசாயிகள் பசுக்கள், நாட்டு மாடுகள்,
செம்மறியாடுகள், வெள்ளாடு
மற்றும் நாட்டுக்கோழிகளை வளர்த்து
வருகின்றனர். சரியான பராமரிப்பின்றி இவற்றை பல்வேறு நோய்
தாக்கி வருகிறது. இவற்றை
மேலாண்மை செய்ய, விவசாயிகள் புதிய தொழில் நுட்பங்களை தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
இதற்கான
வழிமுறை களை விவசாயிகளுக்கு விளக்கும் பொருட்டு, பாப்பாரப்பட்டி வேளாண் அறிவியல் நிலையத்தில் அடுத்த மாதத்தில் பயிற்சி
அளிக்கப்பட உள்ளது. விவசாயத்தில் இளைஞர்களை ஈர்க்கும் திட்டத்தில், ஆடு வளர்ப்புக்கு இரண்டு
பயிற்சி, இந்திய வேளாண்
ஆராய்ச்சி கழகத்தின் திறன்
மேம்பாட்டு திட்டத்தில், கறவை
மாடு வளர்ப்புக்கு ஐந்து
பயிற்சியும் நடக்கிறது.
இதில்
பங்கேற்க விரும்பும் விவசாயிகள், பாப்பாரப்பட்டி வேளாண்மை
அறிவியல் நிலை யத்தை,
63794 82961, 97511 90324 என்ற எண்களில் தொடர்பு
கொள்ளலாம்.