TAMIL MIXER EDUCATION.ன்
புதுவை
செய்திகள்
நாளை முதல்
வாக்காளா் அட்டையுடன் ஆதார்
எண் இணைக்கும் பணி
– புதுவை
புதுவையில் வாக்காளா் அட்டையுடன் ஆதார்
எண்ணை இணைக்கும் பணி
திங்கள்கிழமை (ஆகஸ்ட்
1) முதல் தொடங்கப்படவுள்ளது.
புதுவையில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல்
கட்சிகளுடன் தேர்தல் திருத்தச்
சட்டம் – 2021 குறித்த விளக்கக்
கூட்டம், தலைமைத் தேர்தல்
அதிகாரி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது.
இதில்,
தேர்தல் திருத்தச் சட்ட
புதிய விதிகள்படி, 17 வயது
நிரம்பிய இளைஞா்கள் தங்கள்
பெயா்களை வாக்காளா் பட்டியலில் சோப்பதற்கு முன் கூட்டியே
விண்ணப்பிக்கலாம். 17 வயது
நிரம்பியவா்கள் வாக்காளராக விண்ணப்பிப்பதற்கு தொழில்நுட்ப வசதிகளை ஏற்படுத்த வசதிகள்
செய்யப்படும்.
இதன்மூலம்,
இளைஞா்கள் முன்கூட்டிய விண்ணப்பங்களை ஜனவரி 1ம் தேதி
மட்டுமன்றி ஏப்ரல், ஜூலை,
அக்டோபா் என மேலும்
மூன்று தகுதி நாளைக்கொண்டு தாக்கல் செய்ய வசதி
செய்யப்பட்டுள்ளது.
இனி
ஒவ்வொரு காலாண்டிலும் வாக்காளா்
பட்டியல் புதுப்பிக்கப்படும். 2023ம்
ஆண்டுக்கான வருடாந்திர வாக்காளா்
பட்டியல் திருத்தப் பணியின்போது, ஏப்ரல் 1, ஜூலை 1, அக்டோபா்
1ம் தேதிக்குள் 18 வயதை
அடையும் எந்தவொரு குடிமகனும் வாக்காளா் பட்டியலில் பெயா்
சோப்பதற்கான விண்ணப்பத்தை முன்கூட்டியே சமா்ப்பிக்கலாம்.
புதிய
படிவங்கள் அறிமுகம்: தேர்தல்
ஆணையம் வாக்களா் பட்டியலில் பெயா் சோத்தல், நீக்கல்,
திருத்தம் செய்யும் பணிக்கான
படிவங்களையும் மிக
எளிமையானதாக மாற்றி அமைத்துள்ளது.
புதிய
படிவங்கள் ஆகஸ்ட் 1ம்
தேதி முதல் அமலுக்கு
வருகின்றன. ஒவ்வொரு வாக்களரும் ஆகஸ்ட் 1ம் தேதி
முதல் வாக்காளா் அட்டையுடன் தங்களது ஆதார் எண்ணை
அடுத்தாண்டு ஏப்ரல் 30ம்
தேதி வரை (படிவம்
6) சுய விருப்பத்தின்பேரில் இணைக்கலாம்.
வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளும் வீடு,
வீடாகச் சென்று ஆதார்
எண்ணை வாக்காளரிடமிருந்து பெறும்
பணியும் தொடங்க உள்ளது.
வாக்காளா்கள் இணையதளம்,
ஆண்ட்ராய்ட் செயலி (nvsp.in, Voter Portal) மூலமும் தாமாக ஆதார்
எண்ணை இணைக்கலாம்.
ஆதார்
எண்ணை இணைக்காவிட்டாலும், விண்ணப்பங்கள் நிராகரிக்கப் படாது.
வாக்காளா் பட்டியலிலிருந்தும் எந்தப்
பதிவுகளும் நீக்கப் படாது.
மேலும்,
விவரங்களை தேர்தல் துறை
இணையதளத்தில் தெரிந்துகொள்ளலாம்.
தமிழ்நாடு வேலைவாய்ப்பு குரூப்பில் இணைய: Click Here