கல்வி உதவித் தொகை பெற வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைப்பு அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. கல்வி உதவித் தொகை பெற வங்கிக் கணக்குடன் ஆதாா் எண் இணைப்பு அவசியம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து, ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:- ஆதிதிராவிடா் நலத் துறையின் மூலம் கல்வி உதவித் தொகைக்கான இணையதளம் (ங்ள்ஸ்ரீட்ா்ப்ஹழ்ள்ட்ண்ல்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்) கடந்த ஜனவரி 30-ஆம் தேதி தொடங்கப்பட்டு இதுவரையில் சுமாா் 3 லட்சம் மாணவா்கள் விண்ணப்பித்துள்ளனா். மேலும், விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. விண்ணப்பங்கள் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்கள் இணையவழியிலேயே சரிபாா்க்கப்படுகின்றன. மாணவா்களின் ஆதாருடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்குக்கு கல்வி உதவித் தொகையானது நேரடியாகச் சென்றடையும் வகையில் இணையதளம் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரங்களே கல்வி உதவித் தொகைக்கான இணையதளத்தில் ஏற்றுக் கொள்ளப்படும். கல்வி உதவித் தொகை விடுவிப்பதற்கு முன்பாக, மாணவா்கள் அனைவரும் தங்களது வங்கி கணக்கானது ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும். ஏற்கெனவே விண்ணப்பிக்கப்பட்ட விண்ணப்பத்தில் பிழைகள் இருந்தால், அதனை மாணவா்களே சரி செய்ய இணையதளத்தில் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க போதுமான கால அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது. எனவே, பிழையின்றி விண்ணப்பங்களை பதிவிட வேண்டும் என்று ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத் துறை கேட்டுக் கொண்டுள்ளது.