லைசென்ஸ் சேவைகளுக்கு RTO அலுவலகம் அவசியமில்லை
நவீன
டிஜிட்டல் காலம் என்பதால்
அரசுத் துறைகளும் டிஜிட்டல்
நவீனமயமாக்களுக்குள் நுழைந்துவிட்டன. மக்களின் தேவைகளை எளிதில்
பூர்த்தி செய்யும் நோக்கில்
அனைத்துச் சேவைகளையும் இணையத்தில் வழங்க வழிவகை செய்யும்
பொருட்டு சிறுகச் சிறுக
ஒவ்வொரு சேவையாக இணைய
உலகிற்கும் அரசு அறிமுகப்படுத்துகிறது. குறிப்பாக, மத்திய
சாலைப் போக்குவரத்து மற்றும்
நெடுஞ்சாலைத் துறை
அமைச்சகம் இதில் கொஞ்சம்
முன்னோக்கி நகர்ந்துவருகிறது.
சமீபத்தில் டோல்கேட்களில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில்
டோல் கட்டணங்களை ஒருங்கமைத்து பாஸ்டேக் என்ற முறையை
அறிமுகப்படுத்தியது. அதேபோல
இணையத்தின் மூலம் வருவாயும்
முறைப்படி அரசுக்குச் சென்று
சேர்கிறது.
இந்த
முறையால் முன்பை விட
அதிக நிதி அரசுக்கு
வருவதாக அரசுத் தரப்பில்
தெரிவிக்கப்பட்டது. இதுமட்டுமில்லாமல் சாலைகளில் பயணிப்பவர்கள் லைசென்ஸ் உள்ளிட்ட ஆவணங்களை
மொபைலில் காட்டும் வசதியும்
அறிமுகப்படுத்தப்பட்டது.
அந்த
வரிசையில் தற்போது வட்டார
போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) வழங்கப்படும்க் 18 சேவைகளைத்
தற்போது இணையத்தில் எளிய
முறையில் கிடைக்கும் வகையில்
புதிய திட்டத்தை அமைச்சகம்
அறிமுகம் செய்துள்ளது.
ஒரேயொரு
ஆதார் அட்டையைக் கொண்டே
பொதுமக்கள் எளிதாக லைசென்ஸ்
புதுப்பித்தல், லைசென்ஸ்
நகலைப் பெறுதல், சர்வதேச
ஓட்டுநர் உரிமம் பெறுதல்
உள்ளிட்ட 18 சேவைகள் டிஜிட்டல்மயமாக்கப்பட்டுள்ளன. இந்தச் சேவைகளைப்
பெற கட்டாயம் உங்களின்
லைசென்ஸோடு ஆதாரை இணைத்திருக்க வேண்டும்.
18
சேவைகள் என்னென்ன?
புதிதாக வாகன
ஓட்ட பழகுவர்களுக்கான லைசென்ஸ்
காலாவதியான லைசென்ஸை
புதுப்பித்தல்
லைசென்ஸின் நகலைப்
பெறுதல் (டூப்ளிகட்)
லைசென்ஸில் முகவரியை
மாற்றுதல்
சர்வதேச ஓட்டுநர்
அனுமதி பெறுதல்
லைசென்ஸுருந்து வாகனங்களை
நீக்குதல்
வாகனத்தைத் தற்காலிகமாகப் பதிவுசெய்தல்
முழுமையாக கட்டமைக்கப்பட்ட வாகனத்தைப் பதிவு செய்வதற்கான விண்ணப்பம் பெறுதல்
பதிவுச் சான்றிதழ்
பெறுதல் மற்றும் பதிவுச்
சான்றிதழ் நகல் பெறுவதற்கான விண்ணப்பம்
பதிவுச் சான்றிதழுக்கு ஆட்சேபனை சான்றிதழ் (NOC) வழங்குவதற்கான விண்ணப்பம்
வாகனத்தின் உரிமையை
மாற்றுவதற்கான விண்ணப்பம் மற்றும் நோட்டீஸ் அனுப்புதல்
பதிவுச் சான்றிதழில் முகவரி மாற்றுவதற்கான தகவலைத்
தெரியப்படுத்துதல்
அங்கீகாரம் பெற்ற
ஓட்டுநர் பயிற்சி மையத்திலிருந்து ஓட்டுநர் பயிற்சி பதிவுக்கான விண்ணப்பம்
வாடகை–கொள்முதல்
ஒப்பந்தத்திற்கு ஒப்புதல்
பெறுதல் மற்றும் ஒப்பந்தத்தை நீக்குதல்.