பெண்களுக்கு இலவச
தொழில் பயிற்சி மையம்
துவக்கம்
ஆனைமலை
அடுத்த கோட்டூரில், இலவச
தொழில்பயிற்சி மையம்
துவங்கப்பட்டுள்ளது. ஆனைமலை
அடுத்த கோட்டூர் டி.இ.எல்.சி.,
பள்ளி அருகே, ஆழியாறு
அறக்கட்டளை சார்பில் பெண்களுக்கு தொழில்பயிற்சி மையம்
துவங்கப்பட்டது.
முன்னாள்
ஐ.ஏ.எஸ்.,
அதிகாரி விஜயகுமார் தலைமையில்
மையம் துவங்கப்பட்டது. அறக்கட்டளையின் அறங்காவலர்கள் பூங்கோதை,
செல்லமுத்து, சின்ராஜ் முன்னிலை
வகித்தனர்.
அறக்கட்டளையினர் கூறியதாவது: பத்தாம் வகுப்பு, +2 மற்றும் படித்துவிட்டு வேலை கிடைக்காத பெண்களின் வாழ்வாதாரத்தை, தொழில் வாய்ப்பை ஏற்படுத்த, தையல், கம்ப்யூட்டர் பயிற்சி, பியூடீசியன் உள்பட, பல்வேறு இலவச தொழில் பயிற்சிகள் வழங்கப்பட உள்ளன.
கோட்டூர் சுற்றுப்பகுதி பெண்கள் 9894852713 என்ற எண்ணில் கோட்டூர் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் சிவக்குமாரை தொடர்பு கொண்டு, மையத்தில் சேர்ந்து பயன்பெறலாம்.